🔴 LIVE | முப்பெரும் விழா 2023


DNC/DNT சான்றிதழ் பெறும் வழிமுறைகளும் -கிடைக்கும் பலன்களும்:

MBC சான்றிதழ்  பெற்றுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மற்றும் புதிதாக DNC/DNT-சான்றிதழ் வேண்டுவோரும் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் என்ன? கிடைக்கும் சலுகைகள் என்னென்ன?


தொட்டிய நாயக்கர் மற்றும் அதன் உட்பிரிவுகளான (இராஜகம்பளம், கொல்லவார், சில்லவார்,தோக்கலவார்) பிரிவைச் சேர்ந்த (1.சிவகங்கை, 2.விருதுநகர், 3.இராமநாதபுரம், 4.காஞ்சிபுரம், 5.திருவள்ளூர், 6.தஞ்சாவூர், 7.நாகபட்டினம், 8.திருவாரூர்,9.திருச்சி, 10.கரூர், 11.பெரம்பலூர், 12.புதுக்கோட்டை, 13.திருநெல்வேலி, 14.தூத்துக்குடி, 15.சேலம், 16.நாமக்கல், 17.வேலூர், 18.திருவண்ணாமலை, 19.கோவை,மற்றும், 20.ஈரோடு) ஆகிய 20 மாவட்டங்களில் வசிப்பவர்களும், மேற்கண்ட 20 மாவட்டங்களிலிருந்து புதிதாக உருவாகியுள்ள மாவட்டங்களில் வசிப்பவர்களும், இந்த 20 மாவட்டங்களிலிருந்து வேலை நிமித்தமாக வேறு மாவட்டங்களுக்கு குடியேறிய சமுதாய மக்கள் அனைவரும் தாங்களிடம் ஏற்கனவேயுள்ள MBC சான்றிதழை எடுத்துக்கொண்டு அருகிலுள்ள அரசின் ஈ-சேவை மையத்தை அணுகி DNC/DNT சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் கிராம நிர்வாக அதிகாரியின் ஒப்புதலுக்குப்பின் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் பொழுதும், கிராம நிர்வாக அதிகாரி விசாரணையின் பொழுதும், சான்றிதழ் வழங்க தயாராகிவிட்டாலோ அல்லது மறுக்கப்பட்டாலோ ஒவ்வொரு நிலையிலும் உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுக்கப்படும்.


உங்களுக்கான சான்றிதழில் DNC/DNT இப்படித்தான் வரும், இதைப்பெற்றுக்கொண்டு, மீண்டும் அதே ஈ-சேவை மையத்தில் DNT சான்றிதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கையில் தற்பொழுது கையிலுள்ள சான்றிதலை ஆவணமாக தாக்கல் செய்யவேண்டும். DNT சான்றிதழ் தயாரானவுடன் உங்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரும். DNT சான்றிதழ் பெற்றவுடன் சீர்மரபினர் வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டால் அரசின் சலுகைகளை பெற முடியும். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் உடனடியாக DNT சான்றிதழை பெற்றுவிட்டால் வருங்காலத்தில் தேவையானபொழுது உடனடியாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆதலால் விரைந்து செயல்படுக….. சமுதாய தலைவர்கள் தேவைப்படுவோருக்கு உதவிடுக.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved