🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலக அதிசங்களில் ஒன்றான பிரமிட் வடிவ கோபுரங்கள் தமிழகத்தில் எங்குள்ளது தெரியுமா?

பிரமிட் என்றதும் எகிப்தில் இருக்கும் பிரமிடுகள் மட்டுமே பொதுவாக நம் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரமிடுகளை ஆதிமனிதர்கள் உருவாக்கி இருந்திருக்கிறார்கள் அவைகள் மன்னர்களை புதைக்கும் வெறும் கல்லறைகள் என்று கூறப்பட்டு, நம்பப்பட்டாலும், உலகின் பெருவாரியான பகுதியில் இத்தகை உயர் நிலை கட்டிடங்களின் தேவை என்ன என்பது இன்னமும் பலரின் ஆய்வில் உள்ளது .

பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய கட்டிட அமைப்புக்கள் வடிவில் பிரமிடுகளாகவே இருந்தன. இந்தவகை கட்டிடங்களின் நிறையில் (Mass) பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும். இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.


பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது "கூபு"வின் (கூபு மன்னரின் கல்லறை. எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் வெளியே கீசா மேட்டுநிலத்தில் அமைந்துள்ள தொல்லியல் களம்) பெரிய பிரமிடு மட்டுமே. இது பெரும்பாலும் சுண்ணக்கல்லால் (ஆற்றின் குறுக்கே வெட்டப்பட்டது) கட்டப்பட்டுள்ளது; சில உள்ளறைகள் சிவப்பு கிரானைட்டு கற்களால் ஆனவை. கட்டிடவியல் அதிசயம் எனப்படும் பெரி பிரமிடில் 2.5 tonnes (5,500 lb) இலிருந்து 15 tonnes (33,000 lb) வரை எடையுள்ள 1,300,000 கற்கள் கொண்டு 13 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.

உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப்பிரமிடு இன்னும் அகழப்பட்டு வருகின்றது.

பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழங்கால நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.

மெசப்படோமியர்கள் சிக்குரத்கள் எனப்பட்ட துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துவிட்டன. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அஸிரியர்கள் அவரவர் பகுதிகளில் கட்டினர்.


கி.மு 2700க்குப் பிறகு கட்டத் துவங்கிய எகிப்தியர்கள் கி.மு 1700 வரை பிரமிடுகளைக் கட்டினர். எகிப்தின் பெரிய பிரமிடுகள் கிசா என்ற இடத்தில் உள்ளன. பெரும்பாலான பிரமிடுகள் நைல் ஆற்றின் மேற்குப் புறத்திலேயே கட்டப்பட்டன.

2008 ஆம் ஆண்டுப்படி, இதுவரை 135 பிரமிடுகள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன. எகிப்தின் மிகப்பெரிய பிரமிடாகிய கிசாவின் பெரிய பிரமிட்டின் அடித்தளம் 52,600 square metres (566,000 sq ft) பரப்பளவில் அமைந்துள்ளது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

பிரமிடுகள் என்பது எகிப்துடனேயே அடையாளப்படுத்தப்பட்டாலும் உலகின் மிகக் கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது.

இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன. நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ அரசர் / அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன.


நைஜீரியா:

அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் சான்றாகக் காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன.

இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன.

கிரீசு:

கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ தொலைவில் தென்மேற்கே இருந்ததாகவும் அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இந்தியா:

இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இத்தகை நெடிய பிரமிட் வடிவக்கட்டிடங்கள், ஆனால் கலை நுட்பத்தோடு சற்றே வடிவில் மாறுபட்டு கோப்புறங்கள் வடிவில் கட்டப்பட்டிருக்கின்றன.

சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் போன்றவை சான்றாகும். ஆனால் இங்கு இவை கல்லறைக்காகக் கட்டப்படவில்லை .

ஏன் இத்தனை நெடிய பிரமாண்ட கட்டிட அமைப்புகளை ஆதி மனிதர்கள் உருவாக்கினார்கள்? பிரமிட் வடிவக்கட்டிடங்கள் மிகுந்த கணித நிபுணத்துவத்தை பயன்படுத்திக்காட்டப்பட்டிருக்கிறது. இதற்கும் வேறுகிரகவாசிகளுக்கும் தொடர்புண்டா ? என்பதும் சிலர் எழுப்பும் கேள்வி.

வேறு சிலர் அவைகள் மிகப்பெரிய மின் (சக்தி ) நிலையமாக இருக்கலாம் என்கிறார்கள். இன்னமும் தொடர்ந்து புதிய பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. கிரிமியன் பிரமிடுகளைப்பற்றிய செய்திகள் மிகவும் வியப்பூட்டுகின்றன.

புதிர்கள் இன்னமும் நீடித்தேவருகிறது.

நன்றி:அண்ணாமலை சுகுமாரன்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved