தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
சங்கர் அகாடமியில் குரூப்2 முதல்நிலை வெற்றியாளர்களுக்கு இலவசப்பயிற்சி!

சங்கர் அகாடமியில் குரூப்2 முதல்நிலை வெற்றியாளர்களுக்கு இலவசப்பயிற்சி!

Radheyan 17 Dec 2024 | 05:21 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் "கட்டபொம்மன் அகாடமி" யால் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு இலவச பயிற்சிக்காக முதலாமாண்டு (2023-24 கல்வியாண்டில்) 11 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு மேத்தா ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஓராண்டுகளாக பயிற்சி பெற்றுவரும் இவர்களில் சிலர், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 2ஏ முதல்நிலை தேர்வெழுதியிருந்தனர். இந்நிலையில் குரூப்2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. 

நகராட்சி ஆணையர் (கிரேடு-2), தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், வணிகவரி உள்ளிட்ட துறைகளில் உதவியாளர் போன்றபதவிகள் குரூப்-2ஏ பதவிகளின்கீழ் வரும்நிலையில் சுமார் 8 லட்சம் பேர் தேர்வெழுத விண்ணப்பிருந்தனர். மொத்தம் 2540 பணியிடங்களுக்கு 5.81 லட்சம் பேர் தேர்வெழுதினர். ஏறக்குறைய ஒரு பதவிக்கு 230 பேர் போட்டியிட்ட நிலையில், கட்டபொம்மன் அகாடமி சார்பில் இலவசப்பயிற்சி பெற்ற நால்வர் குரூப்2ஏ முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்றனர்.

இதனையடுத்து குரூப்2ஏ முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் பிப்ரவரி மாதம் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதனால் 11/2 மாத காலத்திற்குள் முதன்மைத்தேர்வுக்கு தயாராகவேண்டிய சூழல் தேர்வர்களுக்கு ஏற்பட்டது. ஏற்கனவே மிக வறிய குடும்பத்திலிருந்து கட்டபொம்மன் அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்டு, தங்கள் முதல் முயற்சியிலேயே முதல்படிக்கட்டை வெற்றிகரமாகக் கடந்த மிக எளிய வீட்டுப் பிள்ளைகள், முதன்மைத் தேர்வு பயிற்சிக்கான பொருளாதார வசதியின்றி நெருக்கடியில் தவித்தனர்.  

திறமையானவர்களுக்கு பொருளாதாரம் பெரும் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, "நான் முதல்வன்" திட்டம் உட்பட பல மாநில அரசுகளின் சார்பில் இலவசப்பயிற்சி வழங்க தேர்வுசெய்யப்பட்டுள்ள புகழ்பெற்ற "சங்கர் அகாடமி" மூலம் நால்வருக்கும் பயிற்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில் சமுதாய சொந்தங்கள் நல்லாதரவோடு, ஏற்கனவே பயிற்சி பெற்றுவரும் எஸ்.நிஷிந்தா-வோடு (1) பி.கனகா (2). என்.கோபாலகிருஷ்ணன் (3). இ.பழனிவேல் ஆகியோரும் இணைந்து இலவசப்பயிற்சி வழங்கப்படுகிறது. 

ஆதரவுக்கரம் நீட்டிய நல் உள்ளங்களுக்கு நன்றி!

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Group2A thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண