🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அதிமுக மதுக்கரை ஒன்றியச் செயலாளராக டி.சிவசாமி நியமனம்!

அஇஅதிமுகவின் துணை அமைப்பான புரட்சித்தலைவி பேரவை மதுக்கரை ஒன்றியச் செயலாளராக மாச்சேகவுண்டன்பாளையம் D.சிவசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சமுதாயத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன் விவரம் வருமாறு,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி க.பழனிச்சாமி  அவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக 2023-இல் நடைபெற்ற பொதுக்குழுவில் ஏகமனுதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கட்சி அமைப்புகளில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய நியமனங்கள் நடைபெற்று வந்தது. கட்சி அமைப்பு விதிகளின்படி மூன்றாண்டுகள் பதவிக்காலம் நிறைவுபெற்றுள்ள இடங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில், அக்கட்சியின் முக்கிய துணை அமைப்பான புரட்சித்தலைவி பேரவை உள்ளிட்ட  அமைப்புகளின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் தொட₹சியாக, கோவை தெற்கு மாவட்டம், மதுக்கரை ஒன்றியம் புரட்சித்தலைவி பேரவையின் செயலாளராக மாசேகவுண்டன்பாளையம் D.சிவசாமி அவர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சிறந்த சமூகப்பற்றாளரும், செயல்பாட்டாளருமான சிவசாமி அவர்கள் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கட்டடம் மற்றும் புதிதாக இடம் வாங்குவதற்கு நிதியுதவி அளித்ததோடு, முப்பெரும்விழா சமயத்தில் கட்டபொம்மன் அகாடமிக்காக 5 கம்யூட்டர்களை இலவசமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த இரண்டு வருடங்களுக்குமுன் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் தொடங்குவதற்கு பேருதவி புரிந்ததோடு, சமுதாயம் சார்ந்த நிகழ்வுகள் அனைத்திலும் கட்சி சார்பற்று ஆதரவுக்கரம் நீட்டுபவராக இருப்பவர் சிவசாமி.

திரு.சிவசாமி அவர்களை ஒன்றியச் செயலாளராக நியமனம் செய்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், பரிந்துரை செய்த கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கும், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் உள்ளிட்ட தலைவர்களுக்கும்,  கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார் ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved