🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஸ்ரீலஸ்ரீ.நல்லப்பசுவாமிகள் சிலை திறப்பு - தமிழக முதல்வருக்கு பாராட்டு.

விளாத்திகுளம்.நல்லப்பசாமிகளின் நினைவு ஸ்தூபி திறப்புவிழா இனிதே நடைபெற்றது.


கடந்த 40 ஆண்டுகளாக விளாத்திகுளம் நல்லப்பசாமிகளுக்கு நினைவுமண்டபம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் தொடர்ந்து வைக்கப்பட்டது.


இந்நிலையில் கம்மகுலத்தை சேர்ந்த திரு. சிவகுமார் அவர்கள் "விளாத்திகுளம் நல்லப்பசுவாமிகள் எனும் 200பக்க புத்தகத்தையும், ஒருமணி நேரம் ஓடக்கூடிய ஆவணப்படத்தை சென்னையில் வெளியிட்டார்.

சுவாமிகள் நினைவிடத்தில் திரு.பால்ராஜா அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்.


நல்லப்பசுவாமிகளுக்கு இத்தனை வரலாறு உள்ளதாவென அனைவரும் ஆச்சர்யத்தில்  மூழ்கினர்.


இந்நிலையில் அந்த புத்தகத்தை படித்த மாண்புமிகு மந்திரி கடம்பூர் ராஜீ அவர்கள், அரசு சார்பில் நினைவு ஸ்தூபி அமைக்கப்படுமென்று அறிவித்தார். கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்றினார்.


சுவாமிகள் நினைவு ஸ்தூபியில் பாஞ்சாலங்குறிச்சி ஆலயக்கமிட்டி திரு.முருகபூபதி, திரு.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜீ அவர்களுக்கும், பாஞ்சாலங்குறிச்சி ஆலயக்கமிட்டிக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி.

இவண்:

P. பால்ராஜா.

சுவாமிகளின் சகோதரிவழிப் பேரன்

சிவகாசி.




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved