குரங்கிலிருந்து மனிதன் - மனிதனின் பரிணாம வளர்ச்சி என்னவாகும்?
மனிதர்களாகிய நம்மிடம் உங்கள் முன்னோர்கள் யார்? என்று கேட்டால், நமக்குத் தெரிந்த பாட்டன், பாட்டி அல்லது முப்பாட்டன் பெயரைச் சொல்லுவோம். அதேசமயம், நமக்கெல்லாம் மூதாதையர் யார் என்று கேட்டால், கொஞ்சமும் தயக்கமின்றி குரங்கின் ஓர் இனம்னு சொல்லுவோம்.
அதுபோல மனிதர்கள் மட்டுமல்ல, மற்ற எல்லா உயிரினங்களும் “பரிணாம வளர்ச்சி” அடைந்ததின் காரணமாகத்தான் இன்றைய நிலையில் இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. இந்த இடத்தில் நம் அனைவருக்குள்ளும் ஏற்படும் கேள்வி , "ஏன் இப்ப இருக்கற குரங்குகள் பரிணாம வளர்ச்சி அடையல?” என்பது.
அதற்கான பதில் – “எல்லா குரங்குகளும், உயிரினங்களும் தத்தம் ஆயுள் காலத்திற்குள் பரிணாம வளர்ச்சி அடையாது. காலநிலையும், வாழ்வியல் மாற்றமும் தான் எந்த ஓர் உயிரினமும் பரிணாம வளர்ச்சி அடைவதை நிர்ணயம் செய்யும் மனிதர்களும் பல்லாயிரம் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியைச் சந்தித்தே வருகிறார்கள்” என்பது தான்.
மனிதனின் மூளை வளர்ச்சி முழுமையடைந்து ஒரு லட்சம் வருடங்கள் ஆகியுள்ளன. உலகில் உள்ள உயிரினங்களில் மனித மூளையின் ஆற்றலே மிகப் பெரிது. மனிதனுக்கு மூளையின் திறன் அதிகரித்ததால் உணவுக்காக வில், அம்பு, இதர கல் ஆயுதங்கள், சக்கரம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தான். கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளில் மனித இனத்தின் உடல் வளர்ச்சி முழுமை பெற்றுவிட்ட காரணத்தால் பரிணாம வளர்ச்சி நின்றுவிட்டது என உயிரியல் ஆய்வாளர்கள் சிலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் பரிணாம வளர்ச்சி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என வாதிடுவோரும் உண்டு.
இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து 3024 ஆம் ஆண்டில் என்னென்ன நிகழலாம் என்றும், அறிவியலின் துணை கொண்டு மனிதர்கள் எதை யெல்லாம் செய்யக்கூடும் என்றும் சில எதிர்பார்ப்புகளை முன் வைத்துள்ளார். பிரிட்டிஷ் உடற்கூறியல் நிபுணர் ஆலிஸ் ராபர்ட்ஸ். தகவமைப்புக்கு ஏற்ப மாறிக்கிட்டே வருவது தானே பரிணாம வளர்ச்சி.
1.முதலில் நாம்ம நம்ம தோலில் இருந்து தொடங்குவோம். பிரிட்டிஷ் ஆய்வாளர் ஆலிஸ் ராபர்ட்ஸ், “கடல்வாழ் உயிரினமான பெரிய கடம்பா (Giant Squid) சூழ்நிலைக்கு ஏற்ப தோலின் நிறத்தை மாற்றிக் கொள்வது போல மனிதர்கள் கூட மாற்றிக் கொள்ள வாய்ப்பு இருக்குதுனு” சொல்றாங்க.
2. அடுத்ததாக இதயம். “மருத்துவத்துல எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்து இருந்தாலும் மாரடைப்பாலே (Heart Attack) இன்றும் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கு. மாற்று வழி ஏதும் இல்லாததுக்குக் காரணம், நம் இதயத்தில் காரோனரி, ஆர்டரிஸ் இரண்டும் தொடர்பில்லாமல் இருக்கு, ஆனா, நாய்களுக்கு இரண்டும் தொடர்பில் இருப்பதால் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டாலும் மற்றொன்று வேலை செய்யும். அதுபோலவும் மனித இதயம் மாற்றமடையக் கூடும். ஜூராஸிக் வேல்டு படம் எல்லாம் ஞாபகம் வருதா?
3. மனிதர்களுக்கு உணவுக்குழலும், சுவாசக்குழலும் ஒரே பாதையில் இருக்கும், இது சிலருக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், பறவைகள் போல நமக்கும் தொண்டைக்குழல் மாற்றம் அடையலாம்.
4. ஈமு கோழிகள் போல வேகமாக ஓடுவதற்கேற்ப ‘குஷனிங்’ போன்ற பாதங்கள் வளர்ச்சி அடையக் கூடும். இதுமட்டும் இல்லாமல் குழந்தை பிறப்பில் இருந்து பல விசயங்களைப் பற்றியும் எழுதியிருக்கலாம் அவங்க புத்தகத்தில்.
ஒவ்வொரு நாளும் ஒரு மாற்றம் (Evolution) நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால், நாம் தான் அதைக் கவனிப்பதில்லை. யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூற்றுப்படி “மனித பரிணாம வளர்ச்சிக்கு கற்பனை, சூழ்நிலை மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவைதாம் அதை நோக்கி நகர்த்தும்”. எதுவாக இருந்தாலும் இதுவா நடந்தா நல்லாதான் இருக்கும். இல்ல, அறிவியல் துணைக் கொண்டு மனித இனமே இந்த மாற்றங்களைச் செஞ்சுக்கலாம். ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கும் மேல் ஆகும்.

