கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சவால்விடும் கம்பளத்தார் பயிற்சி மையம்!
தமிழகம் அடிப்படைக்கல்விக்கான அரை நூற்றாண்டுகால பயணத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, தரமான உயர்கல்வியை நோக்கிய பயணமாக தற்போது மாறியுள்ளது. மருத்துவம், பொறியியல் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் அகில இந்திய அளவிலான கடும் போட்டியை உருவாக்கியுள்ள நிலையில், அதில் வெற்றிகொள்வதற்காக மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படிக்கவேண்டிய சூழலும், பெற்றோர்கள் தங்கள் வரவுக்குமீறி செலவு செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

சில ஆயிரக்கணக்கான மருத்துவம், பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு இடங்களுக்கு பல லட்சம்பேர் நீட், ஜேஇஇ, க்ளாட் உள்ளிட்ட பல தேர்வுகளை எழுதுகின்றனர். சொற்ப இடங்களுக்கு லட்சக்கணக்கானோர் போட்டியிடுவதால் கடும் போட்டி உருவாகிறது. இதனால் 12-ஆம் வகுப்புக்குப்பின் வரக்கூடிய நீட், ஜேஇஇ தேர்வுகளுக்காக 8-ஆம் வகுப்பு முதலே பயிற்சி எடுக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுகின்றனர். வகுப்பறையில் சொல்லிக்கொடுப்பதைத் தாண்டி சிறப்பு பயிற்சி வகுப்புகள் அவசியம் என்ற நிலைக்கு தேவைகள் மாறிப்போயுள்ளது. இதன் காரணமாக ஒரு சில பள்ளிகள் சந்தையின் தேவைக்கேற்ப தங்கள் உட்கட்டமைப்பை மாற்றிக்கொண்டுள்ளன, ஒருசில பள்ளிகள் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் சிறப்புப்பயிற்சி அளித்துவருகின்றன.
எனினும் இவ்வாறான கட்டமைப்புகளை எல்லா கல்வி நிறுவனங்களாலும் ஏற்படுத்திக்கொள்ள முடியாத சூழலில், மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் தனியார் டியூசன் சென்டர்கள் அல்லது ஆசிரியர்களைத் தேடி அலைகின்றனர். ஒருசில தனியார் பயிற்சி நிறுவனங்கள் அகில இந்திய அளவில், பெரும் பொருட்செலவில், கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனங்களில் ஆண்டுக்கட்டணம் 1.50 லட்சம் முதல் 3.0 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகச்சிறந்த கல்லூரிகளில் மருத்துவம் அல்லது பொறியியல் பட்டம் பெற குறைந்த பட்சம் 3 முதல் 10 லட்சம் வரை பயிற்சி மையங்களுக்கு செலவிடவேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சற்றேரக்குறைய 40 லட்சம் மாணவர்கள் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பெற்றோர்களுக்கு
ஏற்படும் இப்பெரும்பொருட்செலவை கருத்தில்கொண்டு, குறைந்த செலவில் டிஜிடல் முறையில்,
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயர்தரமான கல்வியை இரண்டாம் கட்ட நகர மாணவர்களும்,
அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களும் பெறும் வகையில் மதுரை மாநகர், மாடக்குளம் பிரதான
சாலையிலுள்ள ஜெஜெ நகரில் “ருத்ரேஷ் அகாடமி ஹைடெக்” என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ளார்
சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் அமைப்புச் செயலாளர்
திரு.சுந்தர்ராஜ் அவர்களின் அன்பு மகன் திரு.சரவணன் மற்றும் அவரது துணைவியார் திருமதி.பெர்ணீஸ்வரி.
மதுரை மாநகரில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சி நிறுவனம் நடத்திவரும் இத்தம்பதியினர், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் SSE, CBSE, ICSE பாடத்திட்ட மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கி சிறந்த ரேங்க் மாணவர்களை உருவாக்கியுள்ளனர். இங்கு படித்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக ‘நீட், ஜேஇஇ’ உள்ளிட்ட தேர்வுகளுக்கும் பயிற்சியளித்து வந்தனர். மிகக்குறைந்த செலவில் கார்ப்பரேட் பயிற்சி நிறுவனங்களுக்கு இணையான பயிற்சியால், மகிழ்ச்சியுற்ற பெற்றோர்களின் வேண்டுகோளினை ஏற்று தங்கள் பயிற்சி மையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டனர்.

இதனடிப்படையில்,
மதுரை மாநகரின் பிரதான பகுதியில் சுமார் 10000 சதுரடி பரப்பளவில் மூன்று தளம் கொண்ட
ருத்ரேஷ் அகாடமியை தங்களுக்கு சொந்தமான இடத்தில் தொடங்கியுள்ளனர். இதன் தொடக்கவிழா
கடந்த 11-ஆம் தேதி காலை 6.30 மணியலவில் ருத்ரேஷ் அகாடமி வளாகத்தில் எழுந்தருளியுள்ள
‘ஸ்ரீ ஞான கணபதி’ ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவோடு நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டு ‘ஸ்ரீ ஞான கணபதி’ யின் அருள் பெற்றனர். மேலும், இவ்விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, ஆலோசகர் கே.லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன், மண்டல பொறுப்பாளர் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு ருத்ரேஷ் அகாடமியின் தாளாளர் எஸ்.சரவணன், இயக்குநர் எஸ்.பெர்ணீஸ்வரி ஆகியோருக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தனர்.

ருத்ரேஷ் அகாடமி தொடக்கவிழா மற்றும் ஸ்ரீ ஞான கணபதி ஆலய திருக்குட நன்னீராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை அமைப்புச்செயலாளர் திரு.ஆர்.சுந்தர்ராஜ் மற்றும் அவரது துணைவியார் எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். மேலும், விழாவுக்கு வருகை தந்த பெற்றோர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களை அமைப்புச்செயலாளர் அவர்களின் மகள் திருமதி சிவகாமி, மருமகன் திரு.தேவராஜ் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

