🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாட்டுத் தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்துக்களா?

தக்காளியில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும், நாட்டுத்தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரகக் கற்கள் வரலாம், செரிமானப் பிரச்சனை வரலாம், அரிசியோடு பயன்படுத்தும்போது வேறுசில ஒவ்வாமைகளும் வரலாம். 

நாட்டுத் தக்காளி விதைகளில் ஆக்சலேட் என்ற ஒரு பொருள் உள்ளது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிலருக்கு வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வாய்வு போன்ற செரிமானப் பிரச்சனைகள் வரலாம். சிலருக்கு தோல் எரிச்சல், மூக்கு ஒழுகுதல் போன்ற ஒவ்வாமை களுக்கும் நாட்டுத் தக்காளி வழி வகுக்கிறது.

சிலருக்கு இரத்தத்தில் அதிக அளவு  பொட்டாசியம் ஏற்பட்டு சிறுநீரக செயல்பாட்டை பாதிக்க அதிக வாய்புகள் உள்ளன. சிறுநீர் கற்கள் உள்ளவர்கள் நூற்றுக்கு எண்பது பேர் நாட்டுத் தக்காளி உண்பவர்களாகத் தான் இருக்கிறார்கள். குறிப்பாக யூரிக் ஆசிட் உள்ளவர்கள் தக்காளியை நினைத்துக்கூட பார்க்கக் கூடாது என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அதுபோல விவசாயிகளுக்கு பெரிய அளவில் வருமான இழப்பைத் தருவது இந்த நாட்டுத் தக்காளிகள் தான். இதில் பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல்கள் அதிகமாக உள்ளது. சந்தை விலையின் ஏற்ற இறக்கத்திற்குத் தகுந்தார்ப்போல் குறைந்தது ஒரு வாரத்திற்குக் கூட இதை சேமித்து வைக்க முடியாது. 

மேலும், நாம் பல்வேறு சமயங்களில், போதுமான சந்தை விலை கிடைக்காமல் விவசாயிகள் ரோட்டில் தக்காளியைக் கொட்டுவதை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம், படித்திருக் கிறோம். காரணம் இதை அதிக நாள் வைத்திருக்க முடியாது என்பதுதான். 

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள், அவசர அவசரமாக உடனுக்குடன் இதை சந்தைகளில் விற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கும் ஒரு பெட்டிக்கு ஒரு கிலோவுக்கு மேல் கழிவுகள் வர வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல், சந்தையில் தக்காளியின் வரத்து குறைவாக இருந்தால், மண்டிக்காரருக்கு ஓரளவுக்கு லாபம்கிடைக்கும். அதே நேரத்தில், அதிகமான தக்காளி வரத்து இருந்தால், மண்டிக்காரர் போட்ட முதலீடு மொத்தமாகப் போய் விடும்.

அது மட்டுமல்லாமல், சந்தைகளில் தக்காளியை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கும் இது பெரிய நஷ்டத்தையே தருகிறது. ஒரு கிலோ தக்காளியில் எப்படியும் அழுகல் மற்றும் பூச்சிகள் என நூறு கிராமுக்கும் கூடுதலாகவே நுகர்வோர்களும் இழப்பு ஏற்படுகிறது. 

ஓரளவுக்கு இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் ரொம்பக் குறைவாக மதிப்பிட்டாலும் ஒரு கிலோ விலை கொடுத்து வாங்கும் தக்காளியில், 900 கிராம் தான் நுகர் வோருக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் நுகர்வோரிடம் குளிர்சாதனப் பெட்டி இல்லை என்றால், ஒரு கிலோ தக்காளியில், 750 கிராம் தான் மிச்சப்படும். மீதி 250 கிராம் அழுகியும், புழுவாகவும் தூக்கி எறியப்படும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தக்காளி விவசாயத்தை ஒரு சூதாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எனவேதான் இதையெல்லாம் உணர்ந்த விஞ்ஞானிகள், தக்காளியில் உள்ள மரபணுக்களில் சில மாற்றங்களைச் செய்து விளைச்சலையும், சந்தையையும், அதன் நீடித்தத் தன்மையையும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

தக்காளி சாகுபடியின் போது, ​​பாரம்பரிய இனப்பெருக்க முறைகள் நீண்ட காலங்கள் மற்றும் சிக்கலான செயல் முறைகளின் குறைபாடுகளைக் கொண்டுள்ளன என்பதைக் கண்டு, தாவர உயிரி தொழில் நுட்பத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியால், இந்த சிக்கலைச் சமாளிப்பது எப்படி என்பதை கண்டறிந்தனர்.

1994 இல் உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு மாதிரி தாவரமாக, முதன் முதலில் தக்காளி ஃபிளாவர் சவ்ர்தான், தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுதான் வணிகமயமாக்கப்பட்ட முதல் மரபணு மாற்றப்பட்ட தாவரமாகும்.

ஆன்டிசென்ஸ் மரபணு மூலம் பாலிகாலக்சுரோனேஸ் ( பிஜி ) மரபணுவில் ஒரு சின்ன திருத்தம் செய்வதின் மூலம், ஃபிளாவர்சவ்ர் ரின் ஆயுளை நீட்டித்துள்ளது. 

இதனால் தக்காளியின் செல்கள் மற்றும் தக்களியின் சுவர்களின்  சிதைவையும் தடுக்கிறது. மேலும் தக்காளி அழுகிப்போகும் தன்மையையும் இந்தத் தொழில்நுட்பம் குறைக்கிறது.

மரபணு எடிட்டிங் என்கின்ற தொழில் நுட்பம் வளர்ந்துவருவதன் பயனாக, மரபணுக்களில் தேவையான சத்துக் களை சேர்க்கவும், தேவையில்லாதவ ற்றை நீக்கவும், அதே நேரத்தில், தேவைக்குத் தகுந்தாற்போல், மரபணு க்களை மாற்றியமைக்கவும், இந்த மரபணு மாற்று தொழில் நுட்பம் உதவுகிறது. 

இந்தத் தொழில் நுட்பத்தால் மரபணுவில் திருத்தம் செய்யப்பட்ட முதல் பயிர், சிசிலியன் ரூஜ் உயர் GABA என்று பெயரிடப்பட்ட அதிக γ-அமினோபி யூட்ரிக் அமிலச் சத்துக் கொண்ட (GABA) தக்காளி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகைகளில் குளுட்டமேட்டை டிகார்பாக்சிலேஷனை GABA ஆக வினையாற்றும், இதனால் இது தக்காளி பழத்தின் ஊட்டச்சத்து மற்றும் தரத்தை மேம்படுத்துகிறது.

எனவே, மரபணு மாற்றப்பட்ட தக்காளிகள், சந்தையில் நீண்ட நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும் வகையிலும், விவசாயிகளும் விலை கிடைக்கும் வரையிலும் வைத்துக்கொள்ளும் வகையில் மட்டுமல்லாமல், பயனாளர்களும் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தொடக்கத்தில் காட்டுத் தக்காளி என்று நெள்ளிக்காய் அளவே அளவுள்ள தக்காளியை, பல நூறு வருடமாக இனக்கலப்பு செய்து, இன்றய நாட்டுத் தக்காளி என்ற இடத்திற்கு வந்திருக்கிறது. இப்போது இது இன்னும் மாற்றமடைந்து, அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறது அவ்வளவுதான். இதைக் கண்டு அஞ்சத்தேவையில்லை.

நாட்டுத் தக்காளியில் இருக்கும் சத்துக்களை விட, ஹைப்ரீட் தக்காளியில் மனித உடலுக்குத் தேவையற்றவைகளை நீக்கியும், கூடுதல் சத்துக்களைச் சேர்த்தும் உருவாக்கப்படுவதால் நம்பி வாங்கிச் சாப்பிடலாம். மற்றபடி இது தொடர்பாக இயற்கை விவசாயம், இயற்கை உணவு என்கின்றப் பெயரில் பரப்பப்படும் செய்திகள் அத்தனையும் ஏமாற்றுதான்.

நன்றி: பெரியார் சரவணன்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved