🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவுபடுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டம்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் கிராமத்தில், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை இழிவு படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை கைது செய்யக்கோரி அக்கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 4-ம் தேதி, நாம் தமிழர் சீமான் கட்சியை சேர்ந்த, சீமான் தம்பி செல்லப்பா என்ற பெயரில் பேஸ்புக் முகவரி கொண்ட ஒருவர், ஒரு தெலுங்கு கொள்ளைக்காரனுக்கு தமிழ் நாட்டில் சிலையா? கட்டபொம்மு ஒரு தெலுங்கு கொள்ளைக்காரன். அவனுக்கு சென்னையில் சிலை வைத்தால் அதை தமிழர்கள் உடைத்து எறிவார்கள் என்று ஒருவர் செய்த பதிவை இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனையடுத்து, செல்லப்பாவின் சொந்த ஊரான குளத்தூர் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவழியை சேர்ந்த  நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்திய விடுதலைக்கு போரிட்டு வீர மரணம் அடைந்த ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரரை கொச்சை படுத்தும் விதமாக, அவரை கொள்ளைக்காரன் என்ற பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அவதூறு பரப்பிய செல்லப்பா மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்யக்கோரி, வைப்பார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்களது கிராமத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved