🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாளை கறுப்புக்கொடி போராட்டம் - தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் அழைப்பு.

அன்புள்ள சொந்தங்களே,

தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட  இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் (OBC),  இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 65%க்கும் அதிகமானவர்கள் என்றாலும், அரசின் அனைத்து அமைப்புகளிலும், சமூகத்தின் அனைத்து நிறுவனங்களிலும் போதுமான அளவு பங்கேற்க, திட்டமிட்டு நமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது நமக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு மட்டுமல்லாமல், அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழங்கிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவ உத்தரவாதத்தை மீறிய செயலாகும். பெரும்பான்மை சமுதாயத்தினரின் உரிமையைகளை பறித்தும், அபகரித்தும், சுரண்டியும், சிறுபான்மை சமூகம் வாழும் ஒரே ஜனநாயகம் உலகில் இந்தியா மட்டுமே. நமது சமூகங்களின் நெறிமுறைகளின்படி, அனைவரையும் பாதுகாக்க பெரும்பான்மை மக்களாகிய நாம் (ஓபிசி) தயாராக இருக்கிறோம். ஆனால் பெரும்பான்மை மக்களின் உரிமையை, சுயமரியாதையை, நல்வாழ்வை காவுகொடுத்து அல்ல.

 நமது தேசத்தை வலுவான மற்றும் உண்மையான ஜனநாயக நாடாக உருவாக்க O.B.C மக்களுக்கு இழைக்கப்படும் அனைத்து அநீதிகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, நம் அனைவருக்கும் தனித்துவமான சமூக கலாச்சார விழுமியங்களும், நிறுவனங்களும் உள்ளடக்கியவர்கள். அதிகாரத்தில் கோலேச்சும் நயவஞ்சக சிறுபான்மையினரின் சூழ்ச்சியால், நாம் கடைபிடித்து வரும் தனித்துவமான சமூக, கலாச்சார விழுமியங்களாலேயே நம்மை பிளவுபடுத்தி, அதிகாரத்தை தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டுவித்து வருகின்றனர்.  அதிகாரமிக்க எந்தப்பதவிக்கும் ஓ.பி.சி மக்கள் வந்துவிடாமல் சாமார்த்தியாமாக காய்நகர்த்தி வருகின்றனர். ஓ.பி.சி. மக்களின் கணக்கெடுப்பை நடத்துதல், மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு பெறுதல் போன்ற அத்தியாவசியாமான , அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தும் அதேவேளையில், எளிமையான பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

கடந்த 100 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் ஓ.பி.சி மக்களுக்காக செயல்பட்டு வரும் நிலையிலும் பெற்றது என்னவோ கையளவே. சமீப காலங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் ஓ.பி.சி சாதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனவே தவிர முழுமையான பலனை பெறமுடியவில்லை. ஆதனால் அனைத்து ஓ.பி.சிக்களின் நலனை பாதுகாக்கும் விதமாக, ஓபிசி வர்க்கத்தின் அடிப்படையில் நமக்கு எதிரான அனைத்து வகையான அநீதிகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், பொதுவான அடிப்படையான பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கும், ஒருங்கிணைந்த முயற்சிகள் காலத்தின் கட்டாயம். நமக்கெதிரான அநீதிக்கான காரணம் பிரிவினையே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  நம்முடைய எல்லா சிரமங்களுக்கும் தீர்வு ஒற்றுமையே.

எனவே, எந்தவொரு அரசியல் கட்சி சார்புமின்றி அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக் குழு (ஏ.ஐ.ஓ.சி.சி) அமைக்க முன்மொழியப்படுகிறது.  ஜூலை-18, நெல்சன் மண்டேலா தினத்தை முன்னிட்டு,ஓ.பி.சி-யினர் கோரிக்கைகள் சம்மந்தமாக, நிலுவையில் உள்ள பல்வேறு தீவிரமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ஒருங்கிணைந்த துள்ளிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இதை வலியுறுத்தி ஜூலை 18-அன்று "கருப்புக்கொடி" ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பிற்படுத்தப்பட்ட இயக்கங்களுடன் இணைந்து "தொட்டிய நாயக்கர்" சமுதாய அமைப்புகளும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்க்கவுள்ளது.

எனவே இந்தியா முழுவதுமுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாய பெருமக்கள், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி போராட்டத்தை நடத்த அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,

விடுதலைக்களம், இராசிபுரம்.                                                                                                     வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.                                                                     தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம், நாமக்கல்.                                                       


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved