🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் த.வீ.க.ப.கழகம் புகார் மனு.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, இந்திய சுதந்திரத்திற்கு முதல் வீரமுழக்கமிட்ட  மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் புகழை களங்கப்படுத்தும் விதமாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பும் போலி தமிழ் தேசியவாதிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளிடமும் இன்று (20.07.2020) புகார் மனு அளிக்கப்பட்டது.


அதன்படி இன்று விருதுநகர் மாவட்டத்தில் மாநிலத் தலைவர் நல்லாசிரியர் திரு. M. சங்கரவேலு அவர்கள் தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடத்தில் மனு அளிக்கப்பட்டது. அப்பொழுது த.வீ.க.பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் மாநில அமைப்புச் செயலாளர் கோட்டைப்பட்டி திரு.சுப்புராஜ்,மாவட்ட தலைவர் மல்லாங்கிணறு திரு.குருசாமி, மாவட்ட பொருளாளர் நாகம்பட்டி திரு.குணசேகரன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் காத்தான்பட்டி திரு. கணேசமூர்த்தி, திருச்சுழி  ஒன்றிய இளைஞரணி செயலாளர் குல்லம்பட்டி திரு.மல்ராஜ் மற்றும் பலர்  உடனிருந்தனர்.

தகவல் உதவி,

காத்தான்பட்டி.திரு.கணேசமூர்த்தி,                                                                                                                                              மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்,                                                                     த.வீ.க.பண்பாட்டுக்கழகம்.                                                                                                                                                                

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved