🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஓ.பி.சி-இடஒதுக்கீடு - ஆகஸ்டு.15 அனைத்து கிராமசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றுக - உள்ளாட்சி தலைவர்களுக்கு ஓ.பி.சி கூட்டமைப்பு வேண்டுகோள்.

அகில இந்திய அளவில் 70% சதவீதமுள்ள ஓ.பி.சி.மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 27% இடஒதுக்கீடு கல்வி,வேலை வாய்ப்புகளில் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் நமது சமுதாய குழந்தைகளுக்கும், மாணவர்களுக்குமான வாய்ப்பு சுரண்டப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த 27% சதவீத இடஒதுக்கீடை முழுமையாக செயல்முறைப்படுத்தக்கோரியும், ஓ.பி.சி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே நடத்தக்கோரியும், வருகிற ஆகஸ்டு 15-சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள அனைத்து கிராம சபைக்கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அகில இந்திய ஓ.பி.சி கூட்டமைப்பு உள்ளாட்சித் தலைவர்களுக்கும், ஓ.பி.சி அரசியல் தலைவர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளது.


5.8.2020 கிராமசபை சிறப்பு கூட்டஅறிவிப்பு

(தமிழ்நாடு கிராமசபை(கூட்டம் கூட்டுதல் & நடத்துதல்)விதிகள் 1998ல் விதி 3ன் கீழ்)

வரும் 15.8.2020 74வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு …………………………………………………………………….. மாநிலம்…………………………………………………………….மாவட்டம்…………………………………………வட்டம்………………………………………ஒன்றியம்……………………………..கிராம பஞ்சாயத்தின் அங்கத்தினர் அனைவரும் கிராமசபபை கூட்டத்தில் கலந்துகொண்டு, இந்திய அரசியல் சட்டத்தில் சரத்து 243Gம் படியும்  11வது அட்டவனையில் வரிசைஎண் 21ல் உள்ளபடி நலிந்த மக்களின் பொருளாதார மேம்பாடும் மற்றும் சமூக நீதியும் கிராம சபையின் அதிகாரம் மற்றும் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளபடி,  105 கோடி ஓபிசி/எஸ்சி/எஸ்டி மக்களுக்கு கடந்த 74 ஆண்டுகளாக கல்வி வேலைவாய்ப்பு வளர்ச்சி திட்டங்களில் உரிய பங்கு வழங்காததால் சமூக பொருளாதார கல்வி அளவீடுகளில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் வருத்ததோடு பதிவுசெய்து. இதுவரை முன்னேற்றத்தின் திட்டம் முழுமையாக கிடைக்காத அம்மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட சிறப்பு தீர்மானங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாடு கிராமசபை(கூட்டம் கூட்டுதல் & நடத்துதல்)விதிகள் 1998ல் விதி 3ன் கீழ் அறிவிக்கப்படுகிறது. 

1. ஓபிசி மக்கள் தொகை கணக்கெடுப்பை கடந்த 90 ஆண்டுகளாக நடத்தாததால் அம்மக்களுக்கு உரிய கல்வி வேலைவாய்ப்பு வளர்ச்சி திட்டங்களில் உரிய பங்கு கிடைக்கவில்லை எனவே அவர்களின் மேம்பாட்டிற்கு உரிய திட்டமிட வரும் 2021 காகிதமில்லா கணக்கெடுப்பில் ஓபிசி புள்ளிவிபரமும் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தி தீர்மானம்.

2. ஓபிசி மக்களுக்கு வழங்கியுள்ள 27% இடஒதுக்கீடு 12% சதவீதம்கூட பூர்த்தியாகாத நிலையில்  ஓபிசி கிரிமிலேயர் வருமான அளவீடுகளில் அரசு/பொது/தனியார்துறையில் பணிசெய்யும் ஓபிசி மக்களில் மாதசம்பளத்தை சேர்க்கவும், விவாசய நில அளவிலும் மாற்றங்களை கொண்டு வந்து கோடான கோடி ஓபிசி பணியாளர்கள் விவசாயிகளின் உரிமைகளை பறிக்க சர்மா குழு வழங்கியுள்ள பறிந்துரையை ஏற்ககூடாது, கிரிமி லேயரை முழுமையாக நீக்க தீர்மானம்.

3. மத்திய கல்வி நிறுவன சட்டம் 2006யை திருத்தி எல்லா கல்வி நிறுவனத்திலும் ஓபிசிக்கு இடஒதுக்கீடு மாநில இடங்களில் மாநில இடஒதுக்கீடு விகிதப்படி இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய தீர்மானம்.

4. 2015ல் தேசிய பிசி ஆணைய பரிந்துரைப்படி ஓபிசி உள்ஒதுக்கீட்டை செயல்படுத்த தீர்மானம்.

5. மத்திய/மாநில எல்லா வளர்ச்சி திட்டங்களிலும் ஓபிசிக்கு தனி ஒதுக்கீடு செய்ய தீர்மானம்.

6. அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி இடஒதுக்கீடு அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

இன்று 20.7.2020 ………………………………………………………………………கிராமத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இப்படிக்கு

கிராமசபை தலைவர்

நகல்:

மாவட்ட ஆட்சியர்/பஞ்சாயத்து ஆய்வாளர்

………………………மாவட்டம்.




  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved