🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாயத்திற்கு நன்றி மறவாத சாப்ட்வேர் இன்ஜினியர்

"மிகவும் பிற்படுத்தப்பட்டோர்" பட்டியலில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் இடம்பெற்றபின், கடந்த முப்பது ஆண்டுகளில் பலபேர் அரசுத்துறைகளில் பணியாற்றுகிறார்கள். பலர் பொறியியல் வல்லுநர்களாக, மருத்துவர்களாக உள்ளனர். அதிகப்படியானோர் நமது சமுதாயத்திலிருந்து வெளிநாடுகளில் பணியாற்ற முடிந்ததும் சமுதாயம் "மிகவும் பிற்படுதப்பட்டோர் பட்டியலில்" இடம் பெற்ற பின்புதான்.  அப்படி பலன்பெற்றவர்களில் ஒருவர் தான் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள "நீராவி கரிசல்குளத்தைச்" சேர்ந்த தம்பி.சூரையா அவர்களும். பாலிடெக்னிக் படிப்பதற்காக தனது 15-ஆவது வயதில் சென்னை மாநகருக்கு சென்றவர், பாலிடெக்னிக் படிப்பிற்குப்பிறகு எம்.சி.ஏ பட்டம் பெற்று தனியார் மென்பொருள்துறையில் பொறியாளராக பணியாற்றிவருகிறார். சமூகவலைதளங்கள் மூலம் அனைத்துப்பகுதி சமுதாய இளைஞர்களுடனும் நல்ல தொடர்பில் உள்ளவர், தொடர்ந்து சமுதாயப்பிரச்சினைகளுக்காகவும், DNT பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருபவர்.

இந்த கொரோனா விடுமுறையில் கிராமத்திற்கு சென்றவர், தனக்கு DNT சான்றிதழ் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதுடன்,கடந்த இரண்டு வாரங்களில் தன்னுடைய கிராமத்தைச்சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு  சான்றிதழ் பெற்றுக்கொடுத்துள்ளார். தற்பொழுது இராமநாதபுரம் மாவட்ட சமுதாய மக்களுக்கு DNT சான்றிதழ் பெற்றுத்தரும் பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்து ஈடுபட்டுவருவதுடன், ஓ.பி.சி.இடஒதுக்கீடு தொடர்பாக சமுதாய இளைஞர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மூலம் அல்லது சமுதாய முக்கிய பிரமுகர்கள் உதவியுடன் படித்து நல்லமுறையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, சமுதாய வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவ முன்வராதவர்கள் நிறைந்த இச்சமுதாயத்தினர் மத்தியில், 25-வயது இளைஞர் சமுதாயத்திற்கு நன்றி மறவாமல், தனக்கு கிடைத்த கொரோனா கால ஓய்வுநேரத்தில் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்கிறார் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையின் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்கள். மேலும் சமுதாய வாக்குகளைப்பெறும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், குறிக்கோளின்றி பணியாற்றும் தலைவர்கள், முகநூலில் மட்டுமே ஆண்டபரம்பரை பெருமை பேசித்திரியும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் "சமுதாயத்திற்கு தான் செய்த பங்களிப்பை சுயபரிசோதனை" செய்து கொள்ள வேண்டிய " தருணம் என்று குறிப்பிட்டவர். தம்பி. சூரையா போன்ற இளைஞர்கள் மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு அதிக தூரம் பயணிக்க வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியத்திடம் பேசிய தம்பி.சூரையா, தான் பிறந்த சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளாதவன் சுயநலவாதி, வாழும்பொழுதே தன்னுடைய அடையாளத்தை இழந்தவனாகிறான் என்றார்.

தம்பி சூரையாவை சமுதாய நலம்விரும்புவோர் அனைவரும் வாழ்த்துவோம்.

தகவல் உதவி,

தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved