செப்-8, மாவீரன் சுந்தரலிங்கம் நினைவுநாள் வீரவணக்கம்!!!
செப்-8, மாவீரன் சுந்தரலிங்கம் நினைவுநாள்:
தளபதி சுந்தரலிங்கம்,துாத்துக்குடி மாவட்டம் கவர்னகிரியில் பிறந்த விடுதலை போராட்ட வீரர். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீரராக சேர்ந்து, தளபதியாக உயர்ந்தவர். கி.பி.1799, செப்'4-இல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, மேஜர் பானர்மன் தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்வதற்காக முற்றுகையிடப்பட்டது. இதை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கில் வீரன் சுந்தரலிங்கம், மனைவி வடிவுடனும் ஒற்றர் படையினரோடு ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்குகளை அழிக்க ஆடு, மாடுகளுடன் கம்பளியை போர்த்தியவாறு வெடிமருந்து கிடங்கு அருகே சென்றனர்.ஆங்கிலேய படைவீரன் ஒருவன் இவர்களை அடையாளம் கண்டு, மற்றவர்களை அழைத்தான்.
நிலைமை கைவிட்டுப்போவதை அறிந்த சுந்தரலிங்கம், வெளிச்சத்திற்காக தான் வைத்து இருந்த தீப்பந்தத்தை மார்போடு அணைத்து வெடிமருந்து கிடங்கில் பாய முற்பட்டார். அவருடன் மனைவியும் பாய்ந்தார். தற்கொலை படையாக மாறி வெடிமருந்து கிடங்கை சாம்பலாக்கியதுடன், அவர்களிருவரும் சாம்பலாயினர்.
எங்கள் மன்னரின் போர்ப்படைத்தளபதியின் தியாகத்திற்கு அவரின் நினைவுநாளில் வீரவணக்கம் செலுத்துகிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.