பேரறிஞர் அண்ணா 112-வது பிறந்தநாள் விழா- தலைவர்கள் உற்சாகம்.
பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 112-வது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் அவர்களின் தலைமையில், புதூர் பேருந்து நிலையம் முன்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் கழக முன்னணியினர்,நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஈரோடு வடக்கு மாவட்டம், சத்தியமங்கலம் செண்பகபுதூர் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.V N.சின்னசாமி அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் செண்பகபுதூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.M.ராசாத்தி, துணைத்தலைவர் திரு.N. சிவகுமார் உள்ளிட்ட கழக மூத்த முன்னோடிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர்.