ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புக- திரு.வைகோ எம்.பியிடம் கம்பளத்தார் சார்பில் மனு.
2020-21 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஓ.பி.சி மக்கள்தொகை கணக்கெடுத்து விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்கவும், தற்பொழுது நடைமுறையில் உள்ள 27% இடஒதுக்கீடு மத்திய அரசுப்பணிகளில் முறையாக வழங்கப்படாமல், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த பல்வேறு தேசிய இனங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு எதிராக நாடாளுமன்ற மேலவையில் குரல்கொடுக்க வேண்டும் என வலியுறுத்து AI OBC CC -யில் அங்கம் வகிக்கும் சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான திரு.வைகோ அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.