23-ஆம் தேதி O.B.C இடஒதுக்கீடுகோரி மாபெரும் போராட்டம் - தொட்டிய நாயக்கர் சங்கங்கள் அழைப்பு.
Thottianaicker
Sep 19, 2020
1990-இல் அமுல்படுத்தப்பட்ட மண்டல் கமிசன் அறிக்கையின்படி, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய 27% இடஒதுக்கீடை முழுமையாக வழங்காமல் சில ஆதிக்க சக்திகள் அபகரித்துக்கொள்வதால், இதுவரை சுமார் 10% இடங்களே ஓ.பி.சி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ்நிலை பதவிகளான சி&டி பிரிவுகளிலேயே நிரப்பப்பட்டுள்ளது. எனவே பல்லாண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வரும் 2020-21 ஆண்டில் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணப்பெடுப்பில் நடத்தக்கோரியும், 27% சதவீத இடஒதுக்கீடை முழுமையாக வழங்கக்கோரியும், வரும்
23.09.2020-இல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பும்
அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறவுள்ளது. விடுதலைக்களம் நிறுவன தலைவர்
திரு.கொ.நாகராஜன் தலைமையில், நாமக்கல்லில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு ஓ.பி.சி சாதி அமைப்புகள் கலந்துகொள்கின்றன.