🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாபெரும் சமூகநீதி ஆர்ப்பாட்டம் - தொட்டிய நாயக்கர் அமைப்புகள் அழைப்பு..

நேற்று (20.09.2020) மாலை நடைபெற்ற அகில இந்திய OBC ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் (Zoom Meeting), தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சங்கம் ஆகியவற்றுடன் நமது வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச் சங்கத்தின் சார்பில், ஆலோசகர் திரு. சுப்பையன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுந்தர்ராஜ், திரு. சுப்பிரமணியன், மண்டல பொறுப்பாளர் முகப்பேர் திரு.ராஜா ஆகியோர்களுடன் நிர்வாகிகள் மூவரும் கலந்து கொண்டனர்.


அக்கூட்டத்தில், OBC (BC மற்றும் MBC) பிரிவைச்சேர்ந்த அனைத்து சமுதாய அமைப்புகளும் ஒருங்கிணைத்து, 2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC பிரிவினரை கணக்கெடுக்க வலியுறுத்தியும்,  OBC பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள 27%  இடஒதுக்கீட்டை மத்திய அரசு பணிகளில் முழுமையாக வழங்க வலியுறுத்தியும், வரும் 23.09.2020, புதன்கிழமை, காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தலைநகர் சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில்  "சமூகநீதி ஆர்ப்பாட்டம்" நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


வருங்கால தலைமுறையினருக்கான, சென்னையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில்  நமது சங்கத்தின் சார்பில் பங்கேற்பதுடன்,  நாமக்கல் மாவட்டத்தில் நமது சகோதர அமைப்புகளான விடுதலைக்களம் மற்றும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைமையேற்று நடத்தும் ஆர்பாட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்கிடவும்,  சமுதாய மக்களுக்கு OBC குறித்த தொடர் பிரச்சாரங்களை சமூகவலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களில் அலுவலகம் எதிரே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில், ஆங்காங்கே சமுதாய உறவுகள் கலந்து கொண்டு, நமது உரிமையை மீட்டெடுக்க குரலெழுப்ப வேண்டுகிறோம். 

இவண்,

விடுதலைக்களம்,                                                                                                                                                                                              வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.                                                                                                   தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம், நாமக்கல்.                                                                                 


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved