இசைமாமேதை நல்லப்பசுவாமிகள் 132-வது ஜெயந்தி - தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை.
இன்று (24.09.2020) காலை விளாத்திகுளம் ஸ்ரீ நல்லப்பசுவாமிகளின் 132-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் அவர்கள் கலந்துக்கொண்டு சுவாமிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மனாரின் நேரடி வாரிசுதாரர் திரு.வீமராஜா என்கிற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை, சமூக ஆர்வலர் திரு.உமாபதி, ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் த.வீ.க.பண்பாட்டுக் கழக மாவட்ட தலைவர் தொழிலதிபர்.திரு.கண்ணன் அவர்கள் தலைமையில், எழுத்தாளர் திரு.சிவக்குமார், நல்லப்பசாமிகளின் குடும்ப உறுப்பினர்கள் திரு.கண்ணன், திரு.மாரிச்சாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் ஊர் பொதுமக்கள், இசைப் பிரியர்கள் என நூற்றுக்குமேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு சுவாமிகளின் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வந்திருந்த அனைவருக்கும் நல்லப்பசுவாமிகளின் குடும்பத்தைச்சேர்ந்த திரு.மாரிச்சாமி அவர்கள் சக்கரை பொங்கல் வழங்கினார்.
தகவல் உதவி: திரு.மாரிச்சாமி.