வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் தலைவர்கள்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவது விவசாயிகள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி தி.மு.க கூட்டணிக்கட்சிகள் சார்பில் இன்று (28..09.2020) தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில் விளாத்திகுளம் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ், கோவை,ஈச்சனாரி திரு.மகாலிங்கம், கோவை ஒன்றிய கவுன்சிலர் திரு.K.மாசிலாமணி உட்பட பல தலைவர்கள் ஆங்காங்கே அவரவர் பகுதிகளில் கலந்து கொண்டனர்.