தொட்டிய நாயக்கர் ஓ.பி.சி. உண்ணாவிரத போராட்டம் மாபெரும் வெற்றி...
2020-21 மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி 50 சதவீத இடஒதுக்கீடு வழக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஓ.பி.சி மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் அகில இந்திய ஓ.பி.சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இன்று (02.10.2020) நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாமக்கலில் தொட்டிய நாயக்கர் நலச்சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உண்ணாவிரத போரட்டம் சிறப்பாக நடைபெற்றது.
முக்குலத்தோர், வேட்டுவக்கவுண்டர், ஊராட்சிக்கவுண்டர், கொவீடு வெள்ளாளர் முத்தரையர்,போயர் உள்பட பல்வேறு சமுதாய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சமுதாயத்தினரை அதிக அளவில் திரட்டி , இடஒதுக்கீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கத்திற்கும் அதன் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கு அகில இந்திய ஓபிசி கூட்டமைப்பு நன்றி தெரிவித்துக்கொண்டது.