ம.தி.மு.க ஒன்றிய பொறுப்பாளராக திரு.பெருமாள்சாமி நியமனம் - தலைவர்கள் வாழ்த்து.
கோவை புறநகர் தெற்கு மாவட்டம், மதுக்கரை கிழக்கு ஒன்றிய மதிமுக பொறுப்பாளராக, ஈச்சனாரி தொழிலதிபர் திரு.பெருமாள்சாமி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திரு.பெருமாள்சாமி அவர்கள் இப்புதிய பொறுப்பில் சிறப்பாக பணியாற்ற திரு.மகாலிங்கம், திரு.மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர். திரு.பெருமாள்சாமியை ஒன்றியபொறுப்பாளராக நியமனம் செய்த கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுக்கும், பரிந்துரை செய்த இளைஞரணி செயலாளர் திரு.வே.ஈஸ்வரன் அவர்களுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.