தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் வலசை திரு.கண்ணன்- தலைவர்கள் வாழ்த்து.
தூத்துக்குடி காண்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் தலைவராக பொறுப்பேற்றுள்ள தூத்துக்குடி மாவட்ட வீ.க.பொ.பண்பாட்டுக்கழக தலைவரும், ஸ்ரீ விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான வலசை திரு.V.கண்ணன் (இவரைப்பற்றி மேலும் விரிவாகப்படிக்க நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களுக்கு சென்னை, வீ.க.பொ .இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் திரு.பழனிச்சாமி, நல்லப்பசுவாமிகளின் வம்சாவளிப்பேரனும், ம.தி.மு.க நெல்லை மத்திய மாவட்ட 16-வது வட்டச்செயலாளர் திரு.மாரிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
திரு.மாரிச்சாமி இதுகுறித்து பேசுகையில், கடும் உழைப்பால் கம்பளத்தார் சமுதாயத்தில் தென்மாவட்டத்தில் பெரும் தொழிலதிபராக உருவாகி தன்னை நிலைநிறுத்திக்கொண்டதோடு, சமுதாயப்பணியிலும் முழுமையாக ஈடுபட்டு, வளர்ந்து வரும் இளம் தலைமுறையில் குறிப்பிடத்தக்க சமுதாய தலைவர்களில் ஒருவராக திரு.கண்ணன் அவர்கள் உயர்ந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளவர், திரு.கண்ணன் அவர்களின் இந்த வளர்ச்சியும், உயர்வும் சமுதாயத்திலுள்ள இளைஞர்களுக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை, வீ.க.பொ.சமுதாய நலச்சங்கத்தின் நங்கொடையாளரும், நலம் விரும்பியுமான வலசை.திரு.கண்ணன் மேலும் பல பொறுப்புகளை பெற்று உயர சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.