ஈச்சனாரி திரு.மகாலிங்கம் ஏற்பாட்டில் கோவையில் கழக முப்பெரும்விழா...
கோவை கிழக்கு மாவட்டம் குறிச்சி தெற்கு பகுதி 100ஆவது வட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா ஈச்சனாரி பியூன் காலனி பகுதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,தலைவர் கலைஞர் ஆகியோர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஈச்சனாரி திரு.G.மகாலிங்கம்(இவரைப்பற்றி மேலும் விரிவாக அறிய நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மருதமலை திரு. சேனாதிபதி அவர்கள் கழகக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள்,வட்டக் கழக செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள்,மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.