மாவீரன் கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாளில் வீரமுழக்கம் எழுப்பிடுவீர் - தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் வேண்டுகோள்...
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்கநாளான அக்'16-ல், தமிழகமெங்கும் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அனைவரும், உரிமைகளுக்காக போராடி இன்னுயிர் நீத்த மாவீரனின் கனவை நனவாக்கும் வகையில், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (OBC=BC+MBC) மத்திய அரசு பணிகளிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி உரிமை முழக்கமிடுமாறு அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்புகள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
விடுதலைக்களம், இராசிபுரம். வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை. தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை,நாமக்கல்.