மகாஜனசங்க தலைவருக்கு நினைவஞ்சலி - சமுதாய தியாகிகளை போற்றும் விடுதலைக்களம்.
தமிழ் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்டு உயிர்நீத்த தியாகிகளுக்கு சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி அவர்களின் நினைவுநாளில் மரியாதை செலுத்துவதை விடுதலைக்களம் தொடர்ந்து பின்பற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், சமுதாயத்திற்காக தன் இறுதி மூச்சுவரை வாழ்நாளெல்லாம் பாடுபட்ட தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் திரு.வையப்ப நாயக்கரின் நினைவுநாள் (20.10.2020) இன்று காலை 10.00 மணிக்கு ராசிபுரம் விடுதலைக்களம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் இராசிபுரம் ஹரிஹரன், பேரையூர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.