பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் தொட்டிய நாயக்கர் - சமுதாய மக்கள் கருத்தென்ன?
தொட்டிய சமுதாயத்தை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க மாநில அரசை வலியுறுத்துவேன் என மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது வீரவணக்க நாளில் தமிழக பி.ஜே.பி தலைவர் திரு.L.முருகன் அவர்கள் கூறியதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. பழங்குடியினர் பட்டியலில் கம்பளத்தாரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் பேசுபொருளாக இல்லாதநிலையில், இதுகுறித்து மத்தியில் ஆளும் கட்சியொன்றின் மாநில தலைவர் பேசியிருப்பது, சமுதாய அமைப்புகள் கவனத்தில் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பிலிருந்தும் இதுகுறித்து வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிலைப்பாட்டை கேட்ட வண்ணம் உள்ள நிலையில், இதுசம்மந்தமாக தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஒத்த கருத்துடைய சகோதார அமைப்புகள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சமுதாய மக்களின் கருத்துக்களை திரட்டும் பொருட்டு இந்த காணொளி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொண்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
நாள்: 23.10.2020 - வெள்ளிக்கிழமை, நேரம்- மாலை 7.00 மணிக்கு...
Join Zoom Meeting
https://us04web.zoom.us/j/5022403533 pwd=U1ZwUStSVHp5Vko5TTZHK21CUzZ6dz09 Meeting ID: 502 240 3533 : Passcode: 4TeCw
இவண்: வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.