🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதாகிப்போனது ஏன்? - காணொளி விவாதமேடை

கம்பளத்தார் சமுதாயத்தில் அரசியல் ஆளுமைகள் அரிதிலும் அரிதாகிப்போனது ஏன்?

1.அரசியல் பிரமுகர்களின் அறியாமையா?

2.சமுதாயத்தினரின் ஆதரவின்மையா?

3.பொருளாதார சூழலா?

தேர்தல் ஜனநாயகத்தில் அரசியலை தவிர்க்க இயலாதது என்பது அனைவரும் அறிந்ததே.  கி.பி.1100-களின் மத்தியிலிருந்து மன்னர் ஆட்சி காலங்களில் கோலேச்சிக்கொண்டிருந்த கம்பளத்து சமுதாயம், ஜனநாயக அரசியல் தொடங்கி 70 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் ஆட்சி அதிகாரத்தில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வருகிறது. இந்த 70-ஆண்டுகால கட்சி அரசியலில் ஒருசிலர் மட்டுமே சமுதாயத்தின் அடையாளமாக, ஆளுமைமிக்கவர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளுக்குநாள் கற்றரிந்த பெருமக்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் சூழலில் அரசியல் அறிவு, அரசியல் மற்றும் சமுதாய விழிப்புணர்வு குறைந்துகொண்டே வருவதும், முப்பது லட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு சமுதாயத்தில் கம்பளத்தார்களின் அடையாளமாக அரசியலில் ஒருவர்கூட இல்லாமல் இருப்பதும் வேதனையானது. இந்தநிலைக்கு யாரொருவரையும் குற்றம்சாட்டுவதை தவிர்த்து, இக்குறையை போக்க வேண்டியது சமகாலத்தில் வாழும் அனைவரின் பொறுப்பு.

இதைப்போக்க ஜனநாயக அரசியிலில் நாம் எங்கே சறுக்கியுள்ளோம் என்பது குறித்த விரிவான ஆய்வு தேவை. ஏற்கனவே பல்வேறு சமுதாயங்களின் பண்பாடு, கலாச்சாரம், அரசியல் நிலைப்பாடு குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தன்னார்வ அமைப்புகள், கம்பளத்தார் சமுதாயம் குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளது நமக்கு கிடைத்துள்ள நிலையில், அதுபற்றி விரிவாக அலசி, ஆராய்ந்து அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சமுதாய அக்கறையுள்ளவர்கள், பல்துறை அறிஞர்கள், அரசியல் ஆர்வலர்கள்/தலைவர்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் இந்த காணொளி கூட்டத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறது.

Meeting ID - 502 240 3533

Password- 4TeCw

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved