அதிமுக அந்தியூர் ஒன்றியக்கழக செயலாளராக திரு.தேவராஜ் நியமனம்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வடக்கு அதிமுக ஒன்றியக் கழக செயலாளராக முனியப்பம்பாளையம் திரு.M.தேவராஜ் B.sc., (9942677605) அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கால்நூற்றாண்டுகாலத்திற்கும் மேலாக அதிமுகவில் உறுப்பினராக இருந்துவரும் திரு.தேவராஜ் அவர்களின் துணைவியார் திருமதி. வளர்மதி அவர்கள் அந்தியூர் ஒன்றியம் 11-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புதிய பொறுப்பில் திரு.தேவராஜ் அவர்களை நியமனம் செய்த கழக ஒருங்கிணைப்பாளர் திரு.O.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.திரு.K.பழனிசாமி மற்றும் மாவட்ட அமைச்சர் பெருமக்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் கம்பளத்தார்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.