2021-சட்டமன்ற தேர்தலில் கம்பளத்தார் பங்கு என்ன? - கம்பளத்தார் அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம்!!!
அரசியல், ஜனநாயகத்தின் ஆணிவேர். சுதந்திரம் பெற்று 75-ஆண்டுகள் ஆன நிலையில், தமிழகம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், 30-லட்சத்திற்கும் அதிகமான மக்களைக்கொண்ட கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து அரசியல் ஆளுமைகள் அத்தி பூத்தாற்போல் தோன்றி மறைந்து விட்டனர். நிகழ்கால அரசியலில் குறிப்பிடும்படியான, பெயர் சொல்லும்படியான அரசியல் தலைவர்கள், சமுதாயத்திலிருந்து உருவாகவில்லை என்ற ஏக்கம் அரசியல் சாராத மக்களிடையே இருப்பதை பார்த்து வருகிறோம்.
அரசியல் கட்சிகளில் இல்லாத கம்பளத்தார் வாழும் கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அரசியலை ஆக்கிரமித்துள்ள கம்பளத்து அரசியல் தலைவர்களால், அடுத்தடுத்த இடத்தை நோக்கி நகரமுடியவில்லை என்பது கண்கூடாக பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களின் இந்தநிலை சமுதாய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை. எந்த ஒரு பிரச்சினைக்கும் தன் சமுதாய தலைவர்களை தேடும் மக்கள் அவநம்பிக்கையில் உள்ளனர். அரசியலிலுள்ள சமுதாயத்தினர் இதை உணர்ந்து உடனடியாக சரிசெய்யவில்லை எனில் வரும்காலங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களாகக்கூட மக்கள் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டார்கள் என்பதை களநிலவரம் உணர்த்துகிறது.
சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வரும் இளம் தலைமுறையினர், கல்வி, சமூக அந்தஸ்து, பொருளாதாரம் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டாடும் அதேவேளையில், அரசியல் குறித்தான பார்வையில் சமுதாய அமைப்புகள் மீதும், சமுதாய அரசியல் தலைவர்கள் மீதும் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இதன் வெளிப்பாடாக இளம் தலைமுறையினர் தொடர்ச்சியாக ஆங்காங்கே தனித்தனியாக அமைப்புகளையும், கட்சிகளையும் துவங்கி வருகின்றனர்.
எனவே இதுகுறித்து அனைவரும் வெளிப்படையாக விவாதிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். இளைஞர்களின் உணர்வுகளையும், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்று, அச்சரம் பிசகாமல் அவர்களின் மொழியிலிருந்தே விவாதிக்க வேண்டும் என்ற அடிப்படையில், சமுதாய அமைப்புகளையும், அரசியல் தலைவர்களையும் கடுமையாக சாடியிருந்தாலும், அவர்களின் வார்த்தைகளையே தலைப்பாகக்கொண்டு, சமுதாய அமைப்புகளின் தலைவர்களையும், சமுதாய அரசியல் தலைவர்களையும், இளைஞர்களையும் உள்ளடக்கிய விவாதம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் , சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் இந்த காணொளி விவாதமேடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
எனவே சமுதாயத்தின் அக்கறையுள்ள அனைத்துக்கட்சியைச் சேர்ந்த சமுதாய தலைவர்களும், சமுதாய அமைப்புகளின் தலைவர்களும், பல்துறை அறிஞர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டு தங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
(உங்கள் மொபைலில் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று ஜூம் (Zoom App) ஆப்பை டவுன் செய்து கொள்ளவும்.)
(இந்த லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் நேரடியாக ஜூம் மீட்டிங்கில் இணையலாம்)
https://us02web.zoom.us/j/5022403533?pwd=U1ZwUStSVHp5Vko5TTZHK21CUzZ6dz09
அல்லது
ஜூம் ஆப்பிள் சென்று Join Meeting என்பதை க்ளிக் செய்து
Meeting ID என்ற இடத்தில் - 502 240 3533 என்ற எண்ணையும்
Passcode : என்ற இடத்தில் - 4TeCw என்பதையும் நிரப்பி கூட்டத்தில் இணையலாம் .
Meeting ID: 502 240 3533
Passcode : 4TeCw
தலைவர்கள் மட்டும் அல்ல சமுதாய உணர்வுள்ள அத்தனை நண்பர்களும் இந்த #ZOOMகூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.