விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் - விடுதலைக்களம் அழைப்பு.
தென்னிந்திய தீபகற்ப கூட்டணி அமைத்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மாவீரன் விருப்பாச்சி கோபால நாயக்கரின் 219-வது வீரவணக்கநாள் வரும் சனிக்கிழமை 21.11.2020 அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்று காலை 10.30 மணியளவில் விருப்பாச்சியில் உள்ள அவரது சிலைக்கு விடுதளைக்களம் சார்பில் நிறுவன தலைவர் திரு.கொ.நாகராஜன் தலைமையில் பல்வேறு சமுதாய தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இநிகழ்வில் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
இவண்.
விடுதலைக்களம்,
தலைமையகம், இராசிபுரம்