மாண்புமிகு அமைச்சருடன் நாமக்கல் அறக்கட்டளையினர் சந்தித்து D.N.T.மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்.
D.N.T வகுப்பினருக்கு ஒரே சாதிச் சான்றிதழ் வழங்கவும், D.N.T சமூகத்திற்கு பொருளாதார ரீதியாக கணக்கெடுப்பு நடத்த குழு அமைக்க வேண்டியும். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மாண்புமிகு.தங்கமணி அவர்களையும், சமூகநலத்துறை அமைச்சர் மாண்புமிகு. சரோஜா அம்மா அவர்களையும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு.பாஸ்கர் அவர்களையும் சந்தித்து நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் திரு.பழனிசாமி (இவரைப்பற்றி மேலும் அறிய நீலநிற எழுத்தின்மீது விரல்வைக்கவும்) அவர்கள் மனு அளித்தார். இந்த சந்திப்பிற்கு சமுதாயத்தின் மூத்த வழக்கறிஞர் திரு.B. பழனிசாமி அவர்கள் துணை புரிந்தார்.
இந்த சந்திப்பின்பொழுது தலைமையிடத்து செயலாளர் திரு மணி சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் சதீஷ், அறக்கட்டளை உறுப்பினர்கள் காந்தியவாதி திரு.ரமேஷ்,பூச்சிநாயக்கன்பட்டி திரு சின்னசாமி அவர்கள் உடனிருந்தனர்.
செய்தி:
தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல்.