கேரள தேர்தல் களத்தை கலக்கும் கம்பளத்தார்கள்! - வெற்றிபெற வாழ்த்துகள்.
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் மாதம்-10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா தொகுதிக்குட்பட்ட மலம்புழா பஞ்சாயத்து 5-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திரு.நிமேஷ் அவர்களும், புதுச்சேரி பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திரு.கண்ணன் அவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
திரு.கண்ணன் அவர்களை ஆதரித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு.V.முரளிதரன், மாநில பிஜேபி தலைவர் திரு.சுசீந்தரன் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திரு.நிமேஷ் அவர்கள் மழம்புழா ஒன்றிய பிஜேபி துணைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள தேர்தல்களத்தில் களமிறங்கியுள்ள கம்பளத்து சமுதாய வேட்பாளர்கள் இருவரும் மகத்தான வெற்றிபெற தமிழகத்திலுள்ள இராஜகம்பளத்தார்கள் சார்பில் வாழ்த்துகள்.