அதிமுக ஒன்றியத் தலைவராக திரு.புவனேஷ்வரன் முருகானந்தம் நியமனம்-பணிசிறக்க வாழ்த்துகள்!
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் கோவை மாவட்டம், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய மாணவரணித் தலைவராக மண்ணூர் திரு.புவனேஷ்வரன் முருகானந்தம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மண்ணூர் ஊராட்சிமன்ற மு.தலைவர் தெய்வத்திரு.முருகானந்தம் அவர்களின் மகனான திரு.புவனேஷ்வரன் அவர்கள், தென்னைவாரிய இயக்குனராகவும் பொறுப்பு வகித்துவருகிறார். திரு.புவனேஷ்வரன் அவர்களை இப்புதிய பொறுப்பிற்கு பரிந்துரை செய்த உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.S.P.வேலுமணி அவர்களுக்கும்,பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெயராமன் அவர்களுக்கும், கழக அமைப்பு செயலாளரும் மு.அமைச்சருமான திரு.தாமோதரன் அவர்களுக்கும் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகளுக்கும் இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.