நீட் தேர்வில் வெற்றி! மருத்துவப்படிப்பில் இடம்பெற்றார்! விருதுநகர்-ஹேமவர்ஷினி.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, வேடநத்தம் கிராமத்தைச்சேர்ந்த திரு.ரவிச்சந்திரன் - திருமதி. இராமலட்சுமி தம்பதியரின் மகள் R.ஹேமவர்ஷினி, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 720-க்கு 588 மதிப்பெண் பெற்று மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுப்பிரிவில் மருத்துவப்படிப்புக்கு தேர்வாகியுள்ளார். திரு.இரவிச்சந்திரன் அவர்கள் நிலக்கோட்டை அருகேயுள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது. சாதாரண பின்புலத்துடன் மாணவ-மானவிகள் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற்று வருவது, நீட் ஒன்றும் வெற்றிகொள்ள முடியாத தேர்வல்ல என்பதும், இடஒதுக்கீட்டின் அவசியமும் தெளிவாகிறது. மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் பயில ஒதுக்கீடு பெற்றுள்ள R.ஹேமவர்ஷினி அவர்கள் சிறப்பாக மருத்துவம் பயின்று மென்மேலும் சாதனைபுரிய வாழ்த்துக்கள்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.