தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் உரிமை முழக்க போராட்டம்! அனைவரும் அணிதிரண்டு வாரீர்!
தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட DNT பிரிவில் இடம்பெற்றுள்ள 68 சாதிகளுக்கும் DNT என்று ஒரேசான்றிதழ் வழங்காமல் ஒரே சாதிக்கு DNC/DNT என இரு சான்றிதழ்கள் வழங்கிவருதுடன், DNT மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வந்தும் அதற்கு ஒப்புதல் வழங்காமல் அலட்சியப்போக்குடன் நடந்துவரும் தமிழக அரசை கண்டித்தும், DNT பிரிவினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தியும் வரும் 14.12.2020 - திங்கட்கிழமையன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகில் மாபெரும் உரிமை முழக்க போராட்டம் நடைபெறவுள்ளது. சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் நடைபெறும் இப்போராட்டத்தில் நாமக்கல் தொட்டியநாயக்கர் நலசங்கம், சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலசங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்துகொள்கின்றன. இப்போராட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு உரிமை முழக்கம் எழுப்பிட அனைவரையும் அழைக்கின்றோம்.