தொட்டிய நாயக்கர் சமுதாய போராட்டத்திற்கு ஆதரவுகோரி தலைவர்களுடன் சந்திப்பு!
தொட்டிய நாயக்கர் சமுதாயம் உட்பட 68 சமுதாயங்கள் இடம்பெற்றுள்ள DNT பிரிவினருக்கு ஒரே DNT சான்று, DNT மக்கள்தொகை கணக்கெடுப்பு, தனிஇடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, வரும் திங்கள்கிழமை (14.12.2020) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள "உரிமை முழக்க போராட்டத்திற்கு" ஆதரவுகோரி சீர்மரபினர் நலசங்க நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு பல்வேறு கட்சித்தலைவர்களையும், அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் பிரதிநிதிகளாக சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பெருமாள் அவர்களின் தலைமையில், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திரு.T.சுப்பிரமணியம், முகப்பேர் திரு.இராஜா மற்றும் திரு.ஆறுமுகசாமி ஆகியோர்கள் 08.12.2020 முதல் தினந்தோறும் பங்கேற்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.திருநாவுக்கரசர் M.P., சட்டமன்ற உறுப்பினர் திரு.கருணாஸ், சமூக செயல்பாட்டாளரும், திரைப்பட இயக்குனருமான திரு.கௌதமன் உள்ளிட்ட பல தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மேலும், சென்னையில் முகாமிட்டு ஆதரவு திரட்டிவரும் இக்குழுவினரின் போக்குவரத்து வசதிக்காக தன் சொந்தசெலவில் ஐந்துநாட்களுக்கு கார் வசதியை ஏற்பாடு செய்துள்ளார் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.இராமராஜூ அவர்கள்.
2015-முதல் DNT சமுதாய அமைப்புகள் ஒன்றிணைந்து, பல்வேறுகட்டப் போராட்டங்களை முன்னெடுத்து பலவெற்றிகளைப்பெற்று, சீர்மரபினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள சமுதாய மக்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கச்செய்துள்ள சீர்மரபினர் நலசங்கத்தின் கடந்த கால போராட்டங்களில் இதுவரை பங்கேற்காத தொட்டிய நாயக்கர் சமுதாயம், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறப்பான களப்பணியாற்றி வருவது, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளதாக பிற சமுதாய அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.
எல்லாப்புகழும் சமுதாய மக்களுக்கே!
உரிமை முழக்க போராட்டத்திற்கு அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!