துணைச்செயலாளராக திரு.மாரிக்கண்ணன் தேர்வு!- தலைவர்கள் நேரில் வாழ்த்து.
சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினரும், கொளத்தூர் லிங்கப்பெருமாள் ஸ்டோர்ஸ் உரிமையாளருமான திரு.N.மாரிகண்ணன் அவர்கள், பெரம்பூர் வட்டார வியாபாரிகள் நலச்சங்க துணைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் பகுதியைச்சேர்ந்தவரான திரு.மாரிக்கண்ணன், சென்னையில் குடியேறி நீண்டநாட்களாக மளிகைக்கடையில் பணியாற்றி வந்தவர், சுயதொழிலில் ஆர்வம்கொண்டு மளிகை அங்காடியை நடத்தி வருகிறார். கடின உழைப்பால் இளம் சாதனையாளராக உயர்ந்துள்ள திரு.மாரிக்கண்ணன் அவர்களை நேரில் சந்தித்து, சங்கத்தின் பொருளாளர் திரு.S.இராமராஜு, துணைத்தலைவர் திரு.R.பெருமாள் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.T.சுப்பிரமணியன் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.