சமுதாயத்திற்கு முதல் சங்கம் கண்டவரின் வாரிசு சட்டப்படிப்பில் முதல் தங்கம் வென்றார்!
இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் முதல் சங்கம் கண்ட வலுக்கலொட்டி மைனர் P.S.M.பெருமாள் நாயக்கர் அவர்களின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு கட்டபொம்மன் பேரவையின் நிறுவனத்தலைவரும், அதிமுக பிரமுகருமான திரு.P.V.இராதாகிருஷ்ணன் அவர்களின் மகனுமான R.கிருபாகர், திருச்சியிலுள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் (2015-20) B.A.,LLB (Hons) சட்டப்படிப்பை, முதல் வகுப்பில் தங்கப்பதக்கம் வென்று நிறைவு செய்தார். 12.12.2020-இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.A.P.சாஹூஅவர்கள் தங்கப்பதக்கம் வென்ற R.கிருபாகருக்கு சான்றிதழையும், பதக்கத்தையும் வழங்கினார்.
திரு.கிருபாகரின் இந்த சாதனைக்கு சமுதாய தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் R.கிருபாகருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்,
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை.