உரிமை முழக்க போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொட்டிய நாயக்கர்கள் பங்கேற்பு.
உரிமை முழக்க போராட்டத்தில் 68 சாதிகளை உள்ளடக்கிய DNT-சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, உரிமை முழக்கு போராட்டம் காலை 10:00 மணிமுதல் நடைபெற்று வருகிறது. இதில், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று உரிமை முழக்கமிட்டு வருகின்றனர். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சென்னை, கரூர், நாமக்கல், விருதுநகர், இராமநாதபுரம், கோவை, தூத்துக்குடி, திருப்பூர், மற்றும் ஈரோடு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான சமுதாயத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.