கேரள மாநில உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய இராஜகம்பளத்தார்!

கேரள மாநிலத்தில் மூன்றுகட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ஆம்தேதி நடைபெற்றது. இதில் நமது இராஜகம்பள சமுதாயத்தைச்சேர்ந்த திரு.நிமேஷ் அவர்கள் மலம்புழா பஞ்சாயத்திற்குட்பட்ட 5-ஆவது வார்டிலும், திரு கண்ணன் அவர்கள் புதுச்சேரி பஞ்சாயத்திற்குட்பட்ட 2-வது வார்டிலும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக களமிறங்கினர். நேற்று முன்தினம் மூன்று கட்ட வாக்குப்பதிவுகளும் முடிவுற்ற நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியபோதிலும், பாலக்காடு மாவட்டம், மலம்புழா பஞ்சாயத்து 5-வார்டு உறுப்பினர் தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்ட நமது இராஜகம்பளத்து சமுதாய வேட்பாளர் திரு.நிமேஷ் அவர்கள் தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட வேட்பாளரைவிட நூற்றுக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றிபெற்றார். மற்றொரு வேட்பாளர் திரு.கண்ணன் அவர்கள் 64 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார். உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்ற திரு.நிமேஷ் அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாழும் இராஜகம்பளத்து சமுதாய மகக்ளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.