மங்கிய புகழை மீட்டெடுக்க கம்பளத்தார் இனத்தில் மீண்டும் கங்காதேவி!!!
இராஜகம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கத்தின் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் திரு.பொம்முராஜ் அவர்களின் புதல்வி கம்பளத்து கண்மணி செல்வி.மதுமிதா, அகில இந்திய அளவில், ரேபிஸ் நோய் பற்றி நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார்.
மண்ணை வென்று புகழ்கொடி நாட்டிய மாவீரர்கள் நிறைந்த கம்பளத்தார் சமுதாயத்தில், கல்விக்கூடங்களில் பயிரடப்பட்ட கம்பளத்து கண்மணிகள் மதுரையை வென்ற கங்காதேவியின் வாரீசுகளாக, விதைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் விண்ணைமுட்டி வளர்வது, ஆண்களால் சரிந்த கம்பள சாம்ராஜ்ஜியத்தின் எழுச்சியும், மீட்சியும் பெண்களாளேயே சாத்தியம் என்பதற்கு, சமீபகாலமாக பெண்கள் பலதுறைகளில் சாதித்து வருவது அதற்கு கட்டியம் கூறுவதாக உள்ளது. கண்மணி.மதுமிதா பொம்முராஜுக்கு இராஜகம்பளத்தார் சமுதாய மக்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். பெண்மையை போற்றுவோம்.
தகவல் உதவி,
திரு.சௌந்தரபாண்டியன்,
பொதுச் செயலாளர்,
இராஜ கம்பளம் (தொட்டிய நாயக்கர்) மகாஜன சங்கம்,மதுரை.