பிப்ரவரி'07-ல் தொட்டிய நாயக்கர் அரசியல் திருப்புமுனை மாநாடு - விடுதலைக்களம்.
விடுதலைக்களம் அமைப்பின் மண்டல ஆலோசனைக்கூட்டம் கடந்த ஞாயிறன்று (20.12.2020) நாமக்கல், கோல்டன் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வாழும் 30 லட்சத்திற்கும் அதிகமான இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயம், 1200-க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை பெற்றிருந்தும், கடந்த பத்து வருடங்களாக கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இல்லாதது குறித்தான சமுதாய மக்களின் ஏக்கத்தை நிர்வாகிகள் வெளிப்படுத்தினர்.
இதனை கருத்தில்கொண்டு, எதிர் வரும் 2021-சட்டமன்றத்தேர்தலில் கம்பளத்தார்களுக்கு உரிய அங்கீகாரத்தை பெற்றாகவேண்டிய நிலையில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தக்கூட்டத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கம்பளத்தார் சமுதாயத்தின் வலிமையை அரசியல் களத்திற்கு உணர்த்தும் சவாலான பொறுப்பை விடுதலைக்களம் ஏற்றுக்கொள்ளவதாக அறிவித்துள்ளது.
இதன்தொடர்ச்சியாக தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் வலிமையையும், ஒற்றுமையையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில், அனைத்து அமைப்புகளையும், தலைவர்களையும், சமுதாய மக்களையும் ஒன்றுதிரட்டி, வரும் 2021-பிப்ரவரி மாதம் 07 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, இந்தியாவின் குட்டி ஜப்பான் என போற்றப்படும் திருப்பூர் மாநகரில் "தொட்டிய நாயக்கர் அரசியல் எழுச்சி மாநாடு" மிகப்பிரமாண்டமான முறையில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விடுதலைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இவண்,
விடுதலைக்களம்,
தலைமையகம், இராசிபுரம், நாமக்கல்.