🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக அரசு உயரதிகாரிகளுடன் DNT சமுதாயத்தினரின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல் கூட்டம்.

தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 68 சமுதாயங்களைச் சேர்ந்த சீர்மரபினர் சமுதாய மக்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவது பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கடந்த 14.12.2020 அன்று, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் சீர்மர்பினர் நலசங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, வரும் 25.12.2020 முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ள சீர்மரபினர் நலச்சங்கம், மதுரையில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்து, அதற்கான  ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்துவருகிறது.

இச்சங்கத்தின் திருமதி.தவமணி அம்மாள் தலைமையிலான போராட்டக்குழுவினர், ஏற்கனவே துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும், அமைச்சர்கள் வீட்டு முன்பும் திடீர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை உண்டாக்கினர். இப்போராட்டம்  2-கோடிக்கும் அதிகமான மக்களை உள்ளடக்கிய 68-சமுதாயத்தையும் ஒருங்கிணைத்து, நாளுக்கு நாள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவது தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த 2015 முதல் தொடர்ந்து சளைக்காமல் போராட்டம் நடத்திவரும் இச்சங்கத்தினரின் வீரியமிக்க, வலிமை குன்றாத போராட்டம், சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தரலாம் என்று கணிக்கப்படுகிறது.


சீர்மரபினர் நலசங்கத்தின் தொடர்போராட்டத்தின் வலிமையை உளவுத்துறையின் மூலம்  தெரிந்துகொண்ட மாநில அரசு, நேற்று (22.12.2020) திடீரென அனைத்து சமுதாய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து இன்று சீர்மரபினர் நலவாரியத்தின் தலைவர் திரு.சோ அய்யர் தலைமையில், மாநில பிற்படுத்தப்பாட்டோர் நல ஆணையாளர் திரு.மதிவாணன் IAS, வாரியத்தின் துணைத்தலைவர் திரு.முருகன்ஜி உள்ளிட்ட அரசு தரப்பு பிரதிநிதிகளுடன், சென்னை எழிலகத்தில் நடைபெற்ற  கலந்துரையாடல் கூட்டத்தில் 68 சமுதாயத்தினரின்  பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்தனர். 


இக்கூட்டத்தில் இராஜகம்பளத்தார் ஓ.பி.சி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் முகப்பேர்.திரு.இராஜா அவர்களின் தலைமையில் கலந்துகொண்டகுழு, தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு DNT சான்றிதழ்பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து விளக்கிகூறியதுடன், DNT மற்றும் அரசு ஆணை எண் 28 பற்றி,  வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு போதிய தெளிவையும், அறிவுறுத்தல்களையும் வழங்க வேண்டும் எனவும், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் அனைவருக்கும் மாவட்ட எல்லைகள் கடந்து DNT என்று ஒரே சாதி சான்றிதழ் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் சீர்மரபினர் நலசங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் முழுவிபரம்,

1. உடனடியாக அரசு ஆணை 26ல் பத்தி 4யை திருத்தி கீழ்க்கணடவாறு 25.12.2020க்குள் உத்தரவிட வேண்டும்

For Para 4 of GO 26 dated 8.3.2019 read as:

“4. In view of the above, the Government hereby withdraws G.O.M.S. No. 1310, Social Welfare Department dated 30.7.1979 and the earlier nomenclature of De-notified Tribes is restored. Henceforth, the Denotified Communities (DNC) shall be called as Denotified Tribes (DNT) as it was called till 1979 and the communities certificates shall be issued as Denotified Tribes (DNT) for all purposes.  The Denotified Tribes shall continue to avail the benefits of Central and State Governments’ welfare schemes and other entitlements meant for De-notified Tribes/Denotified Communities.”

2. 70 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மத்திய அரசு DNT மக்களின் சமூக பொருளாதார குடும்ப கணக்கெடுப்பு நடத்த 18.8.2020ல் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை ஒரு தொடர்பு அதிகாரியை கூட நியமிக்கவில்லை. மாறாக தமிழ்நாடு பிறப்படுத்தப்பட்டோர் ஆணையம் DNT கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று 10.7.2020ல் தீர்மானம் போடுவதும், சில அரசியல் இயக்கங்களை தூண்டிவிட்டு DNT கணக்கெடுப்பு நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மிரட்டுவதும், கொரானா காரணமாக DNT கணக்கெடுப்பு நடத்த முடியவில்லை என்று தமிழக அரசு கடிதம் எழுதுவதும் (BPL/APL கணக்கெடுப்பு நடந்துகொண்டுள்ளது) ஆளும் அரசுக்கு வாக்களித்த பெருங்கொண்ட மக்களை வஞ்சிக்கும் செயல். எனவே இன்றே உடனடியாக DNT கணக்கெடுப்பு தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.

3. சீர்மரபினர் நலவாரியத்திற்கு தனி விதிகளை உருவாக்கி  உறுப்பினர் சேர்க்கையை இணையம் வழியாக 48 மணிநேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. சீர்மரபினர் நலவாரிய நலத்திட்டங்கள் காலதாமதமின்றி நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் சென்றடைய உரிய துரித துள்ளிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. ஏழை சீர்மரபினர் அனைவருக்கும் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடு இல்லா அனைவருக்கும் உடனடியாக இலவச வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. சீர்மரபினர் முன்னேற்றத்திற்கு தனி நிதிக்கழகத்தை ஏற்படுத்தி பெண்/ஆண் சுய உதவிகுழுக்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் மற்றும் தொடர் வழிகாட்டுதலும் வழங்க வேண்டும்.

7. மத்திய அரசு  வழங்கும் மாதம் ரூ. 1200/- DNT  கல்வி உதவித்தொகை, ஒருமாணவருக்கு தலா ரூ 3 லட்சம் விடுதி கட்டும் திட்டத்தை தமிழகத்திற்கு உடனே பெற்றுத்தர வேண்டும்.

8. தமிழக அரசுகள் NHRC 2000ல்/UN 2007ல் பரிந்துரைத்தபடி HOA-1952 சட்டத்தை உடனே சட்டப்புத்தகத்திலிருந்து முற்றிலுமாக நீக்கவேன்டும்

9. தமிழக அரசு DNT மக்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்

10. தமிழக அரசு சட்டப்படியான அதிகாரத்துடன் கூடிய DNT நிரந்தர ஆணையங்களை உருவாக்க வேண்டும்.

11. தமிழக அரசு DNT மக்கள் வளர்ச்சிக்கு வரும் நிதியாண்டில் கூடுதல் சிறப்பு தனி நிதி ஒதுக்க வேண்டும்

12. தமிழக அரசு சீர்மரபினர் முன்னேற்றத்திற்கு தனி நிதிக்கழகத்தை ஏற்படுத்தி பெண்/ஆண் சுய உதவிகுழுக்களுக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் மற்றும் தொடர் வழிகாட்டுதலும் வழங்க வேண்டும்.

13. 68 DNT சமூக வரையறை சிக்கல்களை களைய தனி நிபுணர்குழு அமைத்து சட்டப்படி நிரந்தர தீர்வு காணவேண்டும்

14. ரெங்கி மற்றும் இதாதே DNT ஆணையகங்களின் மாநில அரசுக்கான பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

15. சீர்மரபினர் நலவாரியத்தின்  பிராந்திய அலுவலகம் மதுரையில் அமைக்கப்பட வேண்டும்.

16. சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க தனி சுற்றறிக்கை அனுப்பி அனைவருக்கும் காலதாமதமின்றி கல்வி உதவிதொகை வழங்க வேண்டும்.

17. சீர்மரபினர் மாணவர் விடுதிகளின் முறைகேடுகளை கலைந்து கற்றல் சூழலை உயர்த்த வேண்டும்.

18. தமிழக அரசின் எல்லா நலத்திட்டங்களிலும் சீர்மரபினருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும்.

19. மாவட்டம்தோறும் சீர்மரபினர் நலவாரியத்திற்கு தனி அலுவலகம் தனி அதிகாரி, தனி பெயர் பலகை வைக்க வேண்டும்.

20. மாவட்டந்தோறும் சீர்மரபினர் குறைதீர்க்க தனி குழு அமைக்க வேண்டும்.

அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கையையும் பொறுமையாக கேட்டறிந்த அரசு தரப்பினர், அனைத்துக்கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளே என்றும், கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அது முடிவடைந்தவுடன் சான்றிதழ் வழங்கும்பணி எளிமையாகவும், விரைவாகவும் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved