மதுரையில் DNT போராட்டம் - குவியும் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள்!
68 சாதிகளை உள்ளடக்கிய DNT சமுதாய மக்களுக்கு ஒரே சாதிசான்றிதழ் வழங்கக்கோரியும், மத்திய அரசு DNT மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 31.12.2020-க்குள் நடத்த உத்தரவிட்டும், அதற்கு ஒத்துழைப்பு வழங்காத மாநில அரசைக்கண்டித்தும், மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று(25.12.20) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுரையில் தொடர்போராட்டம் சீர்மரபினர் நலசங்கம் அறிவித்துள்ளது.
இப்போராட்டத்தில் கலந்துகொள்ள நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம் சார்பில் தலைவர் திரு.பழனிச்சாமி அவர்களின் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் தனி பேருந்து மூலம் சென்று கலந்துகொண்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து ஊமைத்துரை தொண்டர்படையின் திரு.சுரேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சென்னை,இராஜகம்பளத்தார் ஓபிசி-டிஎன்டி உரிமை மீட்புக்குழுயின் சார்பில் திரு.இராமராஜ் , முகப்பேர் திரு.இராஜா ஆகியோர் போராட்டத்திற்கு தேவையான நிதியுதவிகளை சங்க உறுப்பினர்கள் மூலம் திரட்டி அனுப்பிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.