🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பேராசிரியர்.கு.நா.சாமி குற்றச்சாட்டுக்கு நமக்கல் சங்கத் தலைவர் திரு.பழனிச்சாமி விளக்கம்!

பேராசிரியர். கு.நா. சாமிஅவர்களுக்கு வணக்கம்.மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை புறக்கணிப்பீர்!!! என்ற தலைப்பில் தங்கள் எழுதிய வாட்ஸ்அப் கடிதத்தைக் கண்டேன்.

தங்கள் உணர்வுகளை மனப்பூர்வமாக நான் ஆதரிக்கிறேன், அதே சமயத்தில் என் போன்ற சிலருக்கு மன உறுத்தல் ஏற்படுகிறது. ஏனெனில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் நலச்சங்கத்தின் சார்பில் செயல்பட்டு வரும் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை  2015-ல் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு  வருகிறது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 665 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை சேர்த்துள்ளோம். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட  ஒரு  குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன்,  நிலம் வாங்கி, கட்டடம் கட்டி, நமது பிள்ளைகளுக்கு மேற்படிப்பு, வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள், வழிகாட்டுதலையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கிவருவதுடன் மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் படிப்புகளில் சேரும்  மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு  வழங்கி வருகின்றோம். 

இதுதவிர, கடந்த டிசம்பர்-25 ஆம் தேதியன்று மதுரையில் நடைபெற்ற DNT சாதியினருக்கு இரட்டை சாதி சான்றிதழ் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பாக 50க்கும் மேற்பட்ட  போராளிகளை தனிப்பேருந்தில் அழைத்துச்சென்று போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகியுள்ளோம் என்பதை தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். மேலும், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம்  மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு மற்றும் மருத்துவபடிப்பில் மாநில சட்டப்படியான 69% இடஒதுக்கீடு வழங்கக்கோரி, அகில இந்திய ஓபிசி கமிட்டி மதுரை ஹைகோர்ட்டில் தொடுத்துள்ள வழக்கில் தன்னையும் வாதியாக இணைத்துக்கொண்டுள்ளது என்பதையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.    

மேலும் ஓபிசி,டிஎன்டி இடஒதுக்கீடு சம்பந்தமான கோரிக்கைகளுக்காக நாமக்கல், தொட்டிய நாயக்கர் சமுதாய அமைப்பும்,  திரு.நாகராஜ் தலைமையிலான விடுதலைக்களமும் இணைந்து AIOCC & சீர்மரபினர் நலச்சங்கத்தால் அறிவிக்கப்பட்ட போராட்டங்களை தலைமையேற்று நடத்தியுள்ளோம் என்பதையும் தங்களின் பார்வைக்கு வைக்கின்றோம்.

                                                                           நன்றி.

இவண்,

திரு.M.பழனிச்சாமி,

தலைவர், தொட்டிய நாயக்கர் சமுதாய நலச்சங்கம், நாமக்கல்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved