🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முதல்வரை விடாமல் துரத்திய தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்கள்! ஒரேநாளில் இருமுறை சந்திப்பு!

இன்று (29.12.2020) செவ்வாய்கிழமை காலை, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக்காக வருகைபுரிந்த தமிழக முதல்வர் அவர்களிடன்  முள்ளம்பட்டி- பாப்பநாயக்கன்பட்டி  கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து DNT- குறித்து இரண்டு பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. 

சமுதாயத்தின் சார்பில் வரவேற்புரையாற்றும்பொழுது DNT-க்கு ஒரே ஜாதி சான்றிதழ் வழங்கவேண்டும்.  மத்திய அரசு உத்தரவிட்டுள்ள DNT- மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிக்கு தனி அதிகாரியை மாநில அரசு உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன் பின்னர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நமது கோரிக்கை குறித்து எதுவும் பேசாதது ஏமாற்றம் அளித்தது. சமுதாய மக்களின் வருத்தத்தை புரிந்துகொண்ட நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர், சமுதாய தலைவர்களை கட்சி அலுவலகம் வர அழைப்பு விடுத்தார். 10 பேர் கொண்ட குழு சட்டமன்ற உறுப்பினரை அவரது அலுவலகத்தில் சந்தித்தபொழுது, மாண்புமிகு அமைச்சர் தங்கமணி அவர்கள் காரில் செல்லும்பொழுது நமது சமுதாயத்தின் கோரிக்கை குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விரைவில் நல்ல செய்தி வரும்,  நல்லது நடக்கும், இந்த ஆணையை நான் கண்டிப்பாக பெற்றுத் தருவேன் என்று உறுதி அளித்தார். குழுவினரின் திருப்தியின்மையை புரிந்துகொண்டவர், இன்று இரவே மீண்டும் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தபடி இரவு 11 மணிக்கு முதல்வரை சந்திக்க உருவருக்கு அனுமதி பெற்றுத்தந்தார். அறக்கட்டளை தலைவர்.திரு.பழனிச்சாமி மற்றும் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர் முதல்வரை சந்தித்து மீண்டும் கோரிக்கை மனு அளித்ததோடு, ஏற்கனவே முதல்வர் நிறைவேற்றித்தருவதாக அளித்த வாக்குறுதியைத்தான் செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிகவிக்கப்பட்டது.

மேலும் இந்த சந்திப்பின்பொழுது, எங்களின் கோரிக்கையை வரும் சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டுமென்றும், அப்படி நிறைவேற்றும் பட்சத்தில்,மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட 38 மாவட்டங்களிலும் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும்பொழுது, DNT சமுதாய மக்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த உறுதியை சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பாக வழங்கப்படுவதாக முதல்வரிடம்  தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மாண்புமிகு முதல்வர் அவர்கள்,  காலையில் மனு கொடுத்தீங்களே  என்று நினைவுபடுதியவர், நான் பார்த்து செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.    


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved