🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தலைவரிடம் தொட்டியநாயக்கர் சமுதாயத்தினர் மனு.

DNT சமுதாய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 14-ஆம் தேதி முதல்  தொட்டியநாயக்கர் உள்ளிட்ட 68 சமுதாயங்களை உள்ளடக்கிய சீர்மரபினர் நலசங்கம் பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது. இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதற்கிடையே நாமக்கலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வரிடம் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் ஒரேநாளில் இருமுறை சந்தித்து மனு வழங்கப்பட்டது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்திருந்த நிலையில், அரசு தரப்பிலிருந்து இதுவரை சாதகமான தகவல் ஏதும் வரவில்லை.


இதற்கு மத்தியில் DNT சமுதாய மக்களின் கோரிக்கை குறித்து கடந்த 22.12.200 அன்று திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இராஜகம்பளத்தார் சமுதாய கூட்டமைப்பு சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.இராமராஜ் அவர்களின் தலைமையில் சென்ற குழுவினர் மனு வழங்கினர். இதன் தொடர்ச்சியாக நேற்று (30.12.2020) மதுரை வந்திருந்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான திரு.T.R.பாலு அவர்களிடமிருந்து DNT-குழுவினருக்கு அழைப்பு வந்தது. இதனைத்தொடர்ந்து T.R.பாலுவை சந்தித்த DNT குழுவினர், தங்களின் கோரிக்கைகளை அவரிடம் வழங்கினர்.

இதில் சென்னை, இராஜகம்பளத்தார் OBC-DNT உரிமை மீட்புக்குழு கேட்டுக்கொண்டதற்கிணங்க தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் இளம் காளைகள் கட்சியின் நிறுவன தலைவர் திரு.நேதாஜி கார்த்திகேயன் தலைமையில் பலர் கலந்துகொண்டு மனு அளித்தனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved