மாவீரன் பிறந்தநாளில் மது துறந்து மானம் காக்க சபதமேற்போம்! - சத்தியமங்கலம் திரு.பவுல்ராஜ்.
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளான நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழக தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் கொண்டாட சிறப்பான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அதேவேளையில் இந்த மகிழ்ச்சியும், குதூகலக் கொண்டாட்டமும் வெறும் மாயையாக, நம் மனதிற்கு நிறைவைத்தரலாமேயன்றி வீரமரணம் எய்திய மாவீரனுக்கு மகிழ்ச்சிக்குறியது அல்ல.
13-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய கம்பளத்தார் ஆதிக்கம், மதுரையிலேயே நிலைப்பெற்று இருநூறு ஆண்டுகளும் மேலாக கோலேச்சிக்கொண்டிருந்த சமூகம், இன்று அரசியல் முகவரியற்று, அதிகாரபலமின்றி ஆண்ட பரம்பரை கதை பேசிடும் வீணர்களாக காலம் கடத்திக் கொண்டுள்ளோம். வெட்கமும், வேதனையும் படவேண்டிய இனம், தன்னை மீட்டெடுக்கத் தெரியாமல், தடம் மாறி, தடுமாறிக்கொண்டுள்ளது வேதனையின் உட்சம்.
இதேநிலை நீடிக்க விடக்கூடாது. இந்த மாவீரன் பிறந்தநாளில் கம்பளத்தாராய் பிறந்த ஒவ்வொருவரும் லட்சிய உறுதியேற்போம். நம் அதிகாரம் கைவிட்டுச்சென்றதிற்கு "ஆல்கஹாலின்" பங்கு அதிகம். இனத்தை மீட்டெடுக்க முடியாத, சிந்தனை தெளிவற்ற போக்கிற்கு மக்களின் மது மயக்கம் முக்கிய காரணம்.
இன்று இளைஞர்படை உணர்வோடு உள்ளதை, சாதிக்கத்துடிப்பதை கண்கூடாக பார்க்கையில் நம்பிக்கை ஒளி தெரிகிறது. ஆனால் அவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு தடையாக இருப்பது மதுவின் பிடியில் மயங்கி கிடப்பதே. மதுவை விட்டொழிக்க, இளைஞர்களிடமிருந்து இந்த பழக்கத்தை நீக்க, மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் இக்கருத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இயக்கங்களின் முதல்பணி மதுவிற்கெதிரான பிரச்சாரமாக இருக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவில் மதுவை சமுதாயத்திலிருந்து துரத்துவதே, நாம் அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கான முதல்படியாக இருக்கும். மாவீரனின் 262-வது பிறந்தநாளில் இளையோரே சபதமேற்போம். மதுவை துறப்போம்... மானம் காப்போம்...
கட்டுரையாளர்,
திரு.N.பவுல்ராஜ், நகர செயலாளர், ரஜினிகாந்த மக்கள் மன்றம், சத்தியமங்கலம்.