மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு திமுக மகளிர் அணிச்செயலாளர் திருமதி.கனிமொழி.M.P. மாலை அணிவித்து மரியாதை.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் மேற்கு ஒன்றியம், சிங்கிலிபட்டி கிராமத்திற்கு எதிர்க்கட்சியான திமுக நடத்தும் மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு நேற்று (09.01.21) வருகைதந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி அவர்கள், அங்குள்ள மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி P.கீதாஜீவன் M.L.A., அவர்களும்,மாநில பொதுக்குழு உறுப்பினர்.திரு.ஜெகன் பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்கண்டேயன் மற்றும் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல் உதவி:
திரு.செல்வராஜ். ஒன்றியக்கழக செயலாளர்.